இதை அறியாமலிருக்கிறாய் Jeffersonville, Indiana USA 65-0815 1நன்றி, சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஏதோ ஒன்றுக்குள் சென்றுவிட்டேன். இல்லையா? சகோ. காப்ஸ் அவர்களின் மகனின் விஷயத்தில் ஆண்டவர் உதவி செய்ததற்காக அவருக்கு அதிக நன்றி செலுத்த விரும்புகிறேன். சிறிது நாட்களுக்கு நான் மறுபடியும் இந்தியானாவுக்கு வர வேண்டியதாயிற்று. அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்யவில்லையென்று நினைக்கிறேன். அப்படித்தான் நினைக்கிறேன். ஒலிப்பதிவு அறையில் எவரையுமே காணவில்லை. அணில் வேட்டைக்கு செல்வதற்காக இங்கு வந்தேன். எனவே சார்லி என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் - அவரும், நெல்லியும், கொண்டக்கியிலுள்ளவர்களும், ஓரிரண்டு நாட்களுக்கு, அணில் வேட்டைக்காக, நான் எந்தவிதமான பொழுது போக்கையும் இழக்கத் தயாராயிருக்கிறேன். ஆனால் இங்கு ஆகஸ்டு மாதம் நடுவில் வந்து சார்லி, பாங்க்ஸ் இன்னும் மற்றவர்களுடனும் அணில் வேட்டைக்கு செல்வதை என்னால் இழக்கமுடியாது. அது எனக்கு வழக்கமாகிவிட்டது. எனவே நான் ஜோவைக் கூட்டிக் கொண்டு... 2சென்ற முறை நாங்கள் இங்கு வந்திருந்தபோது எங்கள் எல்லோருக்குமே சுகமில்லாமல் போனது - வெப்ப சீதோஷ்ண நிலையிலிருந்து நீங்கள் பெற்றுள்ள குளிர்ந்த சீதோஷ்ணத்துக்கு வந்ததனால் ஏற்பட்ட மாறுதலின் காரணத்தால், இங்கு குளிர்ச்சியாயில்லை என்று நீங்கள் நினைப்பதை நானறிவேன். நீங்கள் அரிசோனாவுக்கு ஒரு முறை வந்து பாருங்கள். அன்று காலை நான் அங்கிருந்து புறப்பட்ட போது, நிழலிலேயே 109 டிகிரி வெப்பம் உண்டாயிருந்தது. நள்ளிரவில், இரவின் போது, குளிர்ந்த காற்று மலையிலிருந்து கீழே அடிக்கத் தொடங்கின பின்பும் அது 96 டிகிரி ஆக இருந்தது. அது நள்ளிரவில், குளிர்ந்த காற்று மலையிலிருந்து அடிக்கத் தொடங்கின பின்பும், அந்த இடம் குளிர் காலத்தில் பரவாயில்லை. ஆனால் வெயில் காலத்தில் அது தேள்களுக்கும், பல்லிகளுக்கும், உறைவிடம் - மனிதர்களுக்கல்ல. வெயில் மிகுதியால் மிருகங்களும் கூட மலைகளுக்கு சென்றுவிடுகின்றன. அவைகளால் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 3என் சிறு துப்பாக்கியைக் கொண்டு வேட்டையாட சென்றேன். நான்... காப்ஸின் மகனைக் குறித்து உங்களிடம் கூற விரும்புகிறேன். ஜோ என்னைக் காட்டிலும் நன்றாக சுடுவான். எனவே என் துப்பாக்கியை அவனிடம் கொடுத்தேன். நாங்கள் சுடுவதற்காக சென்றோம். நான் 50 கெஜம் இடைவெளியில் முளைகளை அடித்தேன். நான் ஜோவிடம் கூறினேன். ஜோ, “அப்பா, என்னால் செய்ய முடியும்” என்று கூறினான். (பாவம் சிறு பையனுக்கு தலைவலி இருந்தது, அதிக ஜுரமும் கூட. அவனுக்காக நான் ஜெபித்தேன். அவன் என்னுடன் சுடுவதற்கு பழகும் இடத்திற்கு வந்தான்...), இருபத்திரண்டு எண் துப்பாக்கியில் இரண்டின் கீழ் பத்து துளை இருக்குமானால், அது இலக்கை இருபத்தைந்து கெஜ தூரத்தில் கடக்கும், பிறகு மறுபடியும் ஐம்பது கெஜ தூரத்தில் - அது 2/10 துப்பாக்கியாயிருந்தால் எப்படியோ அப்படியே. நான் முளையை 25 கெஜ தூரத்தில் நட்டேன். என்னிடம் 2 முளைகள் மீதமிருந்தது. அவைகளையும் நட்டேன். ஜோ அவைகளை நட்டான்! என்னிடம் வேறு முளைகள் இல்லை. எனவே துப்பாக்கி சுடப் பழகுகிறவர்கள் சுட்டு வீழ்த்தின ஒரு களிமண் புறாவை எடுத்து - அது கால் அங்குலம் அகலமிருக்கும் - அதை ஐம்பது கெஜ தூரத்திற்கு கொண்டு சென்றேன். அவன் அதை சுட்டு இரண்டாகப் பிளந்தான். துப்பாக்கியிலுள்ள தொலை நோக்கி என் கண்களுக்காக சரிபடுத்தப்பட்டது. அது அவனைக் காட்டிலும் சில ஆண்டுகள் அதிக வயதானது! அவன், “என்ன தெரியுமா? நான் பில்லியிடம் சென்று என்னை இனிமேல் மிஞ்ச முடியாது என்று கூறவேண்டும்” என்றான். நான், “முதலில் சகோ. நார்மனிடம் சென்று அதை காண்பிப்போம்” என்றேன். 4நான், “ஜோ, உலகம் பூராவும் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் யாருமே (அது யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை)... (முளைகள் பக்க வாட்டில் நடப்படவில்லை, அவை நேராக நடப்பட்டிருந்தன. அந்த களிமண் புறா 14 அங்குலம் இருக்கும், 1/16 அங்குலம் கனம். 14 அங்குலம் உயரம். அதை ஐம்பது கெஜ தூரத்தில் சுட்டு பாதியாகப் பிளந்தான். உலகத்தில் வேறு எவருமே இதைக் காட்டிலும் சிறப்பாக சுட்டிருக்க முடியாது. சாம்பியன்கள் இப்படித் தான் செய்திருப்பார்கள், ஆனால், மூன்று முறையும் அவர்கள் நேராக சுட்டிருக்க முடியாது. முளைகள் மடங்கியிருக்கவில்லை - அது நேராக சென்று துளையுண்டாக்கினது). நான், ”யாருமே இதைக் காட்டிலும் சிறப்பாக சுட்டிருக்க முடியாது“ என்றேன். (அவனுடைய தலைவலி அப்பொழுதே அவனை விட்டகன்றது என்று நினைக்கிறேன்). “இதை சகோ. நார்மனுக்கு காண்பிப்போம்,” என்றேன். (அவர் ஃபீல்டு அண்டு ஸ்ட்ரீம் என்னும் பெயர் கொண்ட சகோ. டோனி ஸ்ட்ரோமலுக்கு சொந்தமான விளையாட்டுப் பொருட்கள் (Sports goods) விற்கும் நிர்வாகத்தில் பணிபுரிகிறார்). அவன், “முதலில் நாம் பில்லியிடம் செல்வோம். பிறகு பாபியிடம் (Bubby) நான் ஒன்றைக் கூற வேண்டும்” என்றான். (வெளிப்படையாகக் கூறினால், அவனுடைய சகோதரன் அவ்வளவு நன்றாக இதுவரை சுட்டதில்லை) அவன், “அங்கு நாம் முதலில் செல்வோம்” என்றான். 5நான் கதவருகில் சென்றபோது, பில்லி, அப்பொழுதும் பைஜாமாவில் இருந்தான். உஷ்ணம் அதிகரித்ததனால் நாங்கள் நேரத்தோடு அங்கு சென்றோம்... தொலைபேசி மணி அடித்தது. நான்... அவன் என்னை இப்படி ஒருவகையாக பார்த்தான். நான், “ஒருக்கால் வியாதிப்பட்டவர்களுக்காக தொலைபேசியில் யாராவது பேசக் கூடும் என்றேன். அது சகோ. காப்ஸ் தன் மகனுக்காக தொலைபேசியில் அழைத்தது. அவன் அறுவை சிகிச்சைக்காக அப்பொழுது கொண்டு செல்லப்பட்டிருந்தான். அவன் நன்றாக குணமடைந்து வருவதாக சற்று முன்பு அவர் என்னிடம் கூறினார். பாருங்கள், தேவன் எவ்வளவு நன்றாக ஜோ என்னும் அந்த சிறுவனின் சத்தத்தின் மூலம் வாய்க்கச் செய்தாரென்று. நாங்கள் சகோ. நார்மனிடம் செல்வதற்கு பதிலாக... அவர் அங்கிருந்திருக்க மாட்டார். நாங்கள் திரும்பி வந்திருப்போம். பிறகு சகோ. காப்ஸும் நானும் சந்தித்திருப்போம். எங்கள் ஜெபங்கள் அதை செய்ததென்று நான் கூற வரவல்லை. ஆனால் அவ்விதமாக நாங்கள் தொடர்பு கொண்டது அவருக்கு விசுவாசத்தை அளித்திருக்கும். வெளிப்படையாகக் கூறினால், அதனால் தான்... நீங்கள் செய்பவைகளில் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டியது அவசியம். தொலைபேசியில் கூப்பிட அவருக்கிருந்த விசுவாசம். இந்த தொலைபேசி அழைப்புக்காக அவர் காசைப் போட்டார். எனவே அது வெகு தூரத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்பாக இருக்க வேண்டுமென்று பில்லி கூறினான். “அவர் மூன்று நிமிடம் பேசுவதற்கு ஏறக்குறைய ஐந்து டாலர்கள் சில்லறையாக போட்டார்” என்றான். அது நியூயார்க் அல்லது தீவுகள் ஒன்றிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பு என்று நினைத்தேன். சகோ. காப்ஸ், லாயிஸுக்கு பதிலாக பில்லியிடம் பேச வேண்டுமென்று நினைத்து 'நபருக்கு நபர்' தொலைபேசி அழைப்பு செய்தார், பாருங்கள். அதனால் தான் அவருக்கு அவ்வளவு செலவானது. அவருடைய மகன் குணமடைந்து வருகிறான். அவன் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு உயிர் வாழ்வது மிகக் கடினம் என்று மருத்துவர் அபிப்பிராயம் கொண்டிருந்ததாக சகோ. காப்ஸ் கூறினார். இன்று காலை நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் - அவனுக்காக எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. 6நாங்கள் விடியற்காலையில் இங்கு அடைந்தோம். நான் மூன்று மணி நேரம் மாத்திரமே உறங்கினேன். எனக்கு மிகவும் களைப்பாயிருந்தது. ஆனால் சபைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தபோது, நான் புறப்பட்டு வந்துவிட்டேன். கர்த்தருக்கு சித்தமானால்... உங்களிடம் நான் கூறின விதமாக, நான் கென்டக்கிக்கு செல்ல வேண்டும். நான் திரும்பி வந்த பின்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை உங்களிடம் பிரசங்கிப்பதாக வாக்கு கொடுத்தேன். அடுத்த ஞாயிற்றுக் கிழமையே நான் பிரசங்கித்துவிடுகிறேன். ஏனெனில் அடுத்த... நான் வீடு திரும்பி, அங்கிருந்து மறுபடியும் கனடாவுக்குச் செல்ல வேண்டும். எனவே நான் அடுத்த ஞாயிறு காலை பேசிவிடுவது நலம். சகோ. நெவில், “நீங்கள் ஏன் ஜனங்களை வாழ்த்திவிட்டு அவர்களிடம் சில நிமிடங்கள் பேசக் கூடாது?” என்றார். நான், “சகோ. நெவில், நான் வேதாகமத்தை திறந்து கூட பார்க்கவில்லையே. இல்லையென்றால் நான்...” என்றேன். அவர், “நீங்கள் ஏதாவதை அவர்களிடம் பேசுங்கள்” என்றார். சகோதரி நெவில், நீங்கள் எப்படித்தான் அவரை சமாளிக்கிறீர்களோ, அவர் மற்றவர்களை இணங்கச் செய்யும் திறனுள்ளவர். இப்பொழுது... 7ஜன நெருக்கடி அதிகமாயுள்ள போது இதை கூற எனக்குத் தருணம் கிடைப்பதில்லை. சகோ. ஆர்மன் நெவிலைப் போன்ற ஒரு போதகரைப் பெற்றுள்ளதற்காக நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஒரு குறிக்கோளுக்காக அவர் மிகவும் விசுவாசமுள்ளவர். அவர் முறுமுறுப்பதை கேட்டதேயில்லை. நான் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சகோ. மான் (Bro. Mann) பேசுவதைக் கேட்டு நான் அனுபவித்துக் கொண்டிருந்தபோது, அவரிடம் அரைமணி நேரம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவ்வாண்டு நாங்கள் கொலராடோவுக்கு செல்லும்போது, அவரிடம் நான் இதைக் குறித்து இன்னும் அதிகம் பேசுவேன். நாங்கள் அவருடைய செய்தியை அனுபவித்துக் கொண்டிருந்தோம், நான் சகோ. நெவிலுடன் நன்றாக உரையாடினேன். “நமது அருமையான போதகரைக் குறித்து ஜனங்களிடம் நான் ஒன்றுமே கூறுவதில்லை. ஜனங்கள் உம்மை நன்றாக நடத்துகிறார்களா?” என்று வினவினேன். அவர், “இதைக் காட்டிலும் சிறப்பாக நடத்த முடியாது” என்று விடையளித்தார். அதை கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றேன். போதகர் திருப்தியடைந்து, ஜனங்களும் திருப்தியடையும்போது அது உண்மையில் ஒரு நல்ல சபையாகின்றது. தேவனும் திருப்தி கொள்கிறார். அவரும் மற்றவர்களும் திருப்தியடைந்துள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கும்போது - முக்கியமாக நாம் பெற்றுள்ள இந்த செய்தியின் நாட்களில் - அது செய்தி ஜனங்களுடனும் தேவனுடனும் கொண்டுள்ள தொடர்ச்சியை காண்பிப்பதாயுள்ளது. 8சகோ. ஆர்மன் நெவிலுக்காகவும் அவருடைய அருமையான மனைவி, குடும்பத்துக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவன் அவர்களை அவருக்கும், நோக்கத்துக்கும் விசுவாசமுள்ளவர்களாய் காத்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அவருக்குப் பிரியமானால், கர்த்தராகிய இயேசு தமக்காக நம்மை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டு செல்ல வரும்போது, நாம் இந்த கூடாரத்தில் நின்று கொண்டிருப்போமாக. அப்பொழுது நாங்கள் இருவரும் நானும் சகோ. நெவிலும் - மிகவும் வயது சென்றவர்களாய் ஒருவர் தோளின் மேல் மற்றவர் கை போட்டு, ஊன்று தடியுடன் நின்று நிலைகொண்டிருப்போமென்று எண்ணுகிறேன். அப்பொழுது நாம் ஒரு நொடியில், ஒரு இமைப் பொழுதில் மறுரூபமாவோம். இந்த மர்மிச சரீரமாகிய அங்கிகள் கீழே விழுந்து, நாம் நித்திய பரிசைப் பெற ஆகாயத்தின் வழியாக மேலே செல்லும்போது, விடை பெறுகிறேன், விடைபெறுகிறேன், இனிய ஜெப வேளையே என்று சத்தமிட்டுக் கொண்டு மேலே எழும்புவோம். 9சகோ. கூமருக்கு கர்த்தர் சுகமளித்தார் என்று கேள்விப்பட்டு தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அநேக காரியங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே இன்று காலை இங்குள்ளதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் நினைத்தேன், இதற்கு பதிலாக... நான் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட பொருளுடன் இங்கு வந்து அதன் பேரில் பேசுகிறேன்... இன்று காலை வெறுமனே வரலாமென்று எண்ணினேன். நான், “சகோ. நெவில், நான் கடிகாரத்தை கவனித்துக் கொண்டேயிருந்து, ஜனங்களை நேரத்தோடு விட்டுவிடுகிறேன். என் இருதயத்திலுள்ளதை உங்கள் மத்தியில் சில நிமிடங்கள் பேசலாமென்று எண்ணுகிறேன். அவர்கள் அதை ஒலிப்பதிவு செய்யாமல், நமது சபையோர் மாத்திரம் இங்கு கூடியிருக்கும் இந்த நேரத்தில், நாம் மாத்திரம் ஒருமித்து ஐக்கியங் கொள்வோம்” என்று கூறினேன். எனவே, நாம் ஜெபம் செய்வோம். 10அன்புள்ள இயேசுவே, நாங்கள் இங்கு ஒன்றுகூடும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளதற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, நள்ளிரவு கடந்து விடியற்காலையில் இக்கூடாரத்தை நான் கண்டபோது நீர் எவ்வளவாக இதனுடன் நின்று வந்திருக்கிறீர் என்பதை நினைத்துப் பார்த்தேன். இங்கிருந்த பழைய குளமும், இப்பொழுது பிரசங்க பீடமுள்ள இடத்தில் வளர்ந்திருந்த புல் பூண்டுகளும் என் நினைவுக்கு வருகிறது. சிறுவனாக இந்த இடத்தில் நான் நின்றேன். ஒரு சிறு தொகையை முன் தொகையாகக் கட்டி வெறெந்த சொத்தையும் ஈடாக செலுத்தாமலே (Collateral) இந்த இடத்தை பெற முயற்சி செய்யலாமென்று திரு. இன்கிராம் கூறினார். அந்த சமயம் இதன் மதிப்பு 2000 டாலர்கள், அதை இருபது ஆண்டுகளில் செலுத்தி தீர்க்க வேண்டும். கர்த்தாவே, இப்பொழுது அதை பாரும். அது குழந்தை பருவத்தில் இருந்த போது, ஒரு ஓட்டையின் வழியாக தண்ணீர் உள்ளே ஊற்றிக் கொண்டிருக்கும். அப்பொழுது நீர், “கர்த்தராகிய நான் இதை நட்டேன். இதற்கு இரவும் பகலும் தண்ணீர் ஊற்றுவேன். யாரும் இதை என் கையிலிருந்து பறித்துக் கொள்ள முடியாது” என்னும் உம்முடைய வார்த்தையினால் எங்களுக்கு வாக்களித்தீர். அதே நேரத்தில் ஜனங்கள், “இன்னும் ஆறே மாதங்களில், இது மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் கொட்டகையாகிவிடும்” என்றனர். 11ஆனால் இந்த பீடத்தண்டையில் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் கிறிஸ்துவைக் கண்டடைந்தனர். இந்த கூடாரத்திலுள்ள ஞானஸ்நான குளம் தொடர்ச்சியாக... ஜனங்கள் அவருடைய நாமத்தை சொல்லிக் கூப்பிட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, தங்கள் பாவங்கள் போகக் கழுவப்பட்டனர். நூற்றுக்கணக்கான ஊனமுற்றவர்கள், அவதியுற்றவர்கள், குருடர்கள், சப்பாணிகள், புற்று நோயால் அரிக்கப்பட்டவர்கள் இங்கு மரித்துக் கொண்டிருக்கும் மனிதர்களாக, ஸ்திரீகளாக, பையன்களாக, பெண்களாக உள்ளே வந்து புது ஜீவனைப் பெற்றவர்களாக, தங்கள் உடலில் புது மாமிசத்தைப் பெற்றவர்களாக, சக்கர நாற்காலிகளிலிருந்தும்... கக்க தண்டங்களை அகற்றிவிட்டும் நடப்பவர்களாக இந்த மேடையை விட்டு வெளியே சென்றிருக்கின்றனர். ஓ, தேவனே, இந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் இப்பணியில்... பிதாவே, நாங்கள் முலைக் கல்லை நாட்டின அந்த காலையை நினைவு கூருவீராக. அந்த இடத்தில் நீர், ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருக்கிற ஒரு அழகான கட்டிடத்தை எனக்கு தரிசனத்தில் காண்பித்தீர். அது ஒரு போதும் தவறாது என்று நான் அறிந்தேன். இவை எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 12அவர்களில் அநேகர் நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடித்து, விசுவாசத்தைக் காத்துக் கொண்டு, இப்பொழுது தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறிக் கொண்டு காத்திருக்கின்றனர். அவர்களுடைய கிரியைகள் அவர்களோடு கூட சென்றது. அவர்கள் புது ஜீவனைப் பெற்று புது சரீரத்துடன் எழும்புவதற்காக, எக்காளம் தொனிக்கவிருக்கும் அந்நேரத்துக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் அநேகர் வயது சென்று தளர்ந்தவர்களாயும், சிலர் இளைஞராகவும், நடுத்தர வயதுள்ளவர்களாகவும் சென்றுள்ளனர். இவர்கள் அனைவருக்காகவும் உம்முடைய நாமம் துதிக்கப்படுவதாக. இப்பொழுது, மரித்தோருக்கு முன்பாகவும் ஜீவனுள்ளோருக்கு முன்பாகவும் நாங்கள் மறுபடியுமாக இங்கு நின்று கொண்டிருக்கிறோம். இன்று காலை உமது வார்த்தைகளை நீர் அபிஷேகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். நான் என்ன பேச வேண்டுமென்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை, பேச வேண்டியதை நீர் தந்தருள வேண்டுமாய் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நீர் எப்பொழுதுமே அதை தந்தருளியிருக்கிறீர். எங்கள் போதகர் சகோ. நெவிலையும், அவருடைய மனைவியையும் ஆசீர்வதிப்பீராக. தர்மகர்த்தாக்களையும், டீகன் குழுவிலுள்ளவர்களையும், கிறிஸ்துவின் சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் ஆசீர்வதியும். இவ்வாழ்க்கையில் நாங்கள் ஒருமித்து இவ்வாறு வாழ்ந்து, வரப்போகும் மறுவாழ்க்கையில் நாங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாக இருக்க அருள் புரிவீராக, இன்று காலை ஆவியும் வார்த்தையும் திருத்துவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள உதவி செய்து, இவ்விடம் விட்டு நாங்கள் இக்காலை செல்லும் போது, நாங்கள் முன்பு வாழ்ந்திருந்த வாழ்க்கையைக் காட்டிலும் மேலான வாழ்க்கை வாழ வேண்டுமெனும் தீர்மானத்தை எங்கள் இருதயங்களில் கொள்ள, எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள அருள்புரியும். இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென்! 13சில நிமிடங்களுக்கு முன்பு நான் வேதாகமத்தை திறந்தேன். அது வெளிப்படுத்தின விசேஷம்: 3-ம் அதிகாரம். எனவே அவர் லவோதிக்கேயா சபைக்கு அளித்துள்ள செய்தியை அந்த அதிகாரத்திலிருந்து வாசிக்கிறேன். இதை நான் அறிவிக்க வேண்டும். (சகோ. நெவில் சற்று முன்பு என்னிடம் இதை கூறினார்). சகோ. பார்னல் - அவர் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் காண நேர்ந்தது - எழுப்புதல் கூட்டம் ஒன்றை மெம்பீஸுக்கு இந்த பக்கத்தில் நடத்துகிறார். யாருக்காகிலும் பழைய விம்பி ஹாம்பர்கர் ஸ்டாண்டு முன்பிருந்த இடம் நினைவிருக்குமானால், அவர் அங்கு ஒரு கூடாரத்தைப் போட்டு, கதிர்களை உள்ளே கொண்டு வரவும், நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் இழந்து போன நிலையில் வழியில் காணப்பட்டால் கிறிஸ்துவுக்கு அவர் செய்து வரும் ஊழியத்தின் மூலம் அவர்களை இரட்சிப்புக்குள் கொண்டு வரவும் முயன்று வருகிறார். இந்த கூடாரத்தில் ஞாயிறு ஆராதனைகள் நடக்கவிருப்பதால், அவர் இன்று கூட்டங்களை நடத்தவில்லை. அது அந்த சகோதரனின் மிகவும் விசுவாசமுள்ள செயல். திங்கள் இரவு முதல் அடுத்த வாரம் முழுவதும் ஆராதனைகள் அங்கு நடைபெறுமென்று உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறோம். கிறிஸ்துவின் அன்பின் செய்தியை சகோ. பார்னல் அளிப்பதைக் கேட்க நீங்கள் அனைவரும் அன்பாக அழைக்கப்படுகின்றீர்கள் என்று நானறிவேன். 14இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷம்: 3-ம் அதிகாரத்திலிருந்து ஒரு பாகத்தை நாம் படிப்போம் - நாம் வேதாகமத்தை படித்தோம் என்பதற்காக. நான் கூறுவது தவறிப் போக வாய்ப்புண்டு. ஆனால் அவர் கூறியுள்ளது ஒரு போதும் தவறாது. எங்கிருந்து தொடங்குவது, என்ன செய்வது, எங்கு செல்வது என்று எனக்கு தெரியவில்லை. இப்பொழுது நாம் 14-19 வசனங்களில் அடங்கியுள்ள லவோதிக்கேயா சபையைக் குறித்த பாகத்தை படிப்போம். லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ குளிருமல்ல, அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும், இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெது வெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன். நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும். குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான் நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்டப் பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாத படிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும் படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு! வெளி. 3: 14 - 19 15என்னை ஒரு நிமிடம் மன்னித்துக் கொள்வீர்களானால், நான் இப்பொழுது படித்துக் கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு பாகம் மிகவும் நல்லதாக எனக்குத் தோன்றினது. அது எந்த பாகமென்று எனக்குத் தெரியவில்லை. இதோ இங்குள்ளது. “நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாய். ஓ, என்னே! இன்றைய சபையின் நிலையை இது சித்தரிக்கிறது. நான் நினைக்கிறேன், இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சபை காலம்... சபை காலங்களைப் பற்றிய செய்திகள் இப்பொழுது புத்தக வடிவில் வந்துள்ளன. ஆயினும் நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால், அதன் நிலையை சற்று ஆராய்வோம். நான் எந்த பொருளையும் எடுத்துக் கொண்டு பேசப் போவதில்லை. ஏனெனில் நாம் முன் ஆயத்தம் எதுவுமின்றி சாதாரணமாக உரையாடிக் கொண்டிருக்கிறோம். கர்த்தர் நம்மை எங்கு வழி நடத்துகிறாரென்று பார்ப்போம். அது நமக்கு உதவியாயுள்ள ஒன்றாக இருக்க வேண்டும். லவோதிக்கேயா சபையையும் அதன் இன்றைய நிலையையும் சற்று சிந்தித்து பார்ப்போம். எனக்குத் தெரிந்தமட்டில், சபை அதற்கென்று ஆயத்தப்படுவதைத் தவிர்த்து கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு இந்நேரத்தில் தடையாயுள்ள வேறொன்றுமே இல்லை எனலாம். 16நேற்று நான் காரில் வந்து கொண்டிருந்தபோது... நானும் பில்லியும் இரண்டாயிரம் மைல் தொலைவிலிருக்கும் டூசோனிலிருந்து காரோட்டி இரண்டு நாட்களில் இங்கு வந்து சேர்ந்துவிட்டோம். நாங்கள் எந்த வேகக் கட்டுப்பாட்டு சட்டங்களையும் மீறி அப்படி செய்யவில்லை. நாங்கள் அந்த கட்டுக்குள்ளேயே... பில்லி காரோட்டும் போது நான் உட்கார்ந்து கொண்டிருப்பேன்... அவன் வேகமாய் ஓட்டுவதைக் காணும் போது... நான், “டேய் சற்றுபொறு,” மெல்லச் செல் என்பேன். “இராயனுடையதை இராயனுக்குச் செலுத்த வேண்டுமென்று,” நமக்கு கூறப்பட்டுள்ளது. (மத். 22 : 21) சென்ற இரவு நாங்கள் காரோட்டி இங்கு வந்து கொண்டிருந்தபோது... ஏறக்குறைய 3 வயதுள்ள ஒரு சிறு பெண் சாலையில் விகாரமான நிலையில் மரித்து கிடந்திருந்தாள். அவளுடைய தாய் குழியில் சவமாகக் கிடந்தாள். இராணுவத்தில் பணிபுரியும் 18 வயது கொண்ட ஒருவன் நன்றாக குடித்துவிட்டு மணிக்கு 120 மைல் வேகத்தில் சாலையின் இடது புறத்தில் காரோட்டி வந்ததனால் விளைந்த விபத்து இது. அவனுடைய உயிரும் ஊசலாடிக் கொண்டிருந்ததென்று எண்ணுகிறேன். அது எப்படியிருந்திருக்குமென்று எண்ணிப் பாருங்கள், இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள். 17அப்பாவிகள் விபத்துக்குள்ளாகி மரிக்கின்றனர். 3 வயதுள்ள சிறுமி ஒருத்தி, குடித்து வெறித்திருந்த ஏதோ ஒரு இராணுவ வீரன். சாலையின் தவறான பக்கத்தில் மணிக்கு 120 மைல் வேகத்தில் காரோட்டி வந்ததன் விளைவாக உயிரிழந்தாள். அவன் மலையின் மேல் வந்து கொண்டிருந்த போது, அவர்களை இடித்து வீழ்த்தி கொன்று போட்டான். அவனும் மரணத் தருவாயிலிருந்தான். பாருங்கள், குற்றமில்லாதவர்கள் இப்படியாக அந்த பையன் கொடூர கொலையைச் செய்த குற்றத்துக்கு ஆளானான். ஒரு மனிதன் குடித்திருந்த நிலையில் சாலையில் அகப்பட்டால், முன் திட்டமிட்டு செய்த கொலைக்காக அவனுக்கு - அது எந்த மனிதனாயிருந்தாலும் - 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும். 18இந்த அரசியலினால் நமக்கு ஒரு உபயோகமுமில்லை. அது அழுகிப்போனது. ஒரு நீதியுள்ள ராஜா ஆளவேண்டுமெனும் தேவனுடைய கருத்து மாத்திரமே சரியானது. அரசியல் எங்கும் பரந்துள்ளது. அதை நீங்கள் விலைக்கு வாங்கிவிடலாம், மோசடி, ஏமாற்றுதல், களவாடுதல், எல்லாமே, சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிறன்று நான் கூறியது போன்று, நாம் எந்நிலையிலுள்ளோம் என்பதை பாருங்கள். பாருங்கள், இவை அனைத்தும் நேர்மையற்றவைகளேயன்றி வேறொன்றுமல்ல. நீதியுள்ள ஒரு ராஜா தன் சொந்த சட்டங்களை உண்டாக்குவான். இன்று நீங்கள் ஒரு மனிதனைக் கொன்றுவிட்டு, அரசியல் செல்வாக்கு படைத்தவர்களாயிருந்தால், தப்பித்துக் கொள்ள முடியும். ஜனநாயகம் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் அது கிரியை செய்யாது. உதாரணமாக, எல்லாவற்றையும் பொதுவாக அனுபவிக்கும் கம்யூனிஸக் கொள்கையும் நல்லது தான். ஆனால் அது கிரியை செய்யாது. தாவீதைப் போன்று, ஒரு ராஜாவை ஏற்படுத்தும் தேவனுடைய முறையே சரியானது. உங்கள் மனதை அதிலே மையமிட்டு... ஒரு கூட்டம் வாத்துக்கள் ஒரே ஒரு தலைவனைப் பெற்றுள்ளது போல, நீங்கள் 2 அல்லது 3 பேர்களை தலைவராகப் பெற்றிருக்க முடியாது. அப்பொழுது நீங்கள் எல்லாவற்றையும் குழப்பி, முடிவில் ஏதோ ஒரு விதமான கருத்தை உடையவர்களாயிருப்பீர்கள். எனவே இன்றைய நிலை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயுள்ளதாக நாம் காண்கிறோம். 19சகோ. நெவிலும், இந்த மற்ற சகோதரர்களும் ஒரு மந்தையை மேய்க்க முயன்று வரும் இந்நேரத்தில் என் மனதில் ஒன்று எழுந்துள்ளது. அதைக் குறித்து இப்பொழுது நாம் பேசுவோம். அதாவது, ஒரு அருமையான ஸ்திரீயிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது எனக்கு நேரடியாக வரவில்லை, வேறொருவர் மூலம் எனக்குக் கிடைத்தது. அவள் என்னைக் கண்டனம் செய்ய முயன்றாள். அவள், “நீங்கள் எப்பொழுதாவது, கிறிஸ்தவ வர்த்தகர்களாகிய நீங்கள், சகோ. பிரான்ஹாம் பிரசங்கிப்பதை நிறுத்த ஏதாவதொன்றை செய்யக் கூடாதா? அவர் 'லவோதிக்கேயா சபை' என்னும் தலைப்பு கொண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இன்னும் வேறு புத்தகங்களை வெளியிடப் போகின்றார். அவர் பெந்தெகொஸ்தே உபதேசத்தை சுக்குநூறாக உடைத்தெறிகிறார். அந்நிய பாஷை பேசுதல் ஆவியைப் பெற்றதன் ஆரம்ப அடையாளமல்ல என்றுஅவர் விவாதிக்கிறார். அவர் பெண் பிரசங்கிகளுக்கு விரோதமானவர்” என்று எழுதியிருந்தாள் (இவள் ஒரு பெண் பிரசங்கி). அவளுடைய மகன்கள், உலகிலேயே எனக்கு தலை சிறந்த நண்பர்கள். 20இந்த கடிதத்தைப் பெற்ற மனிதனுடனும் அவருடைய மனைவியுடனும் நான் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் மனைவி, “சகோ. பிரான்ஹாமே இதை பாருங்கள், இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று சொல்லி கடிதத்தை வெளியே எடுத்து காண்பித்தாள். நான், “நல்லது, சகோதரியே அவளுக்கு புரியவில்லை” என்றேன். அவர்களின் தாய் ஒரு பெண் பிரசங்கியென்று இந்த பையன்கள் என்னிடம் கூறியுள்ளனர். அந்த கடிதத்தில், “ஸ்திரீகள் புருஷர்களின் மேல் அதிகாரஞ் செலுத்தக் கூடாது (1தீமோ. 2:12) என்றால், வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பவுலுக்கு ஆதரவாயிருந்த பெபேயாளைக் குறித்தென்ன? (ரோமர். 16.1)” என்று கேட்டிருந்தாள். நிச்சயமாக, அவள் சரக்குகளை விற்பவள். பவுல் ஜனங்களைக் கேட்டுக் கொண்டான்... ஸ்திரீகள் சபையில் அமைதலாயிருக்க வேண்டும் என்று பவுல் கூறிவிட்டு, அவர்கள் பேசுவதற்கு அனுமதி கொடுக்காமல், உடனே மறுபக்கம் திரும்பி, “சுவிசேஷத்தில் எனக்கு ஆதரவாயிருக்கிற பெபேயாள் சில இரவுகள் பிரசங்கம் செய்வாள்,” என்று கூறியிருப்பான் என்று நினைக்கிறீர்களா? அவன் தான் கூறின வார்த்தைக்கே முரணாக செயல்பட்டதாக ஆகிவிடுமே. அவள் அந்த கடிதத்தில், “இவையனைத்துக்கும் மேலாக, ஒரு ஸ்திரீ வேதாகம காலத்தில் நியாயாதிபதியாக இருந்திருக்கிறாள். (அது எஸ்தர் என்று நினைக்கிறேன்) அது புருஷரின் மேல் அதிகாரஞ் செலுத்தும் பணி இல்லையென்றால்...” என்று எழுதியிருந்தாள். 21அண்மையில் இந்த சபை கட்டிடத்தில் சுகம் பெற்ற ஒரு வர்த்தகரின் மனைவி என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, அது எப்பொழுதுமே எனக்குப் புதிராக இருந்து வந்துள்ளது என்றாள்”. நான், “ஏன், சகோதரியே, அது ஏன் புதிராக இருக்க வேண்டும்?” என்றேன். அவள், “பெண் நியாயாதிபதி ஒருவள் இருந்திருக்கிறாளோ” என்றாள். நான், “அது அரசியல், சபையல்ல. அதற்கும் சபைக்கும் எவ்வித தொடர்புமில்லை. பவுல், ”நியாயப்பிரமாணம் கூறியுள்ள படியும் அது கீழ்ப்படிந்திருக்க வேண்டும்“ என்றான். நியாயப்பிரமாணம் ஒரு ஸ்திரீயை ஆசாரியனாக செய்ய முடியாது... ஒரு பெண் பிரதான ஆசாரியனை நீங்கள் கண்டதில்லை. ஒரு பெண் ஆசாரியனையும் நீங்கள் கண்டதில்லை - வேதத்தில் எங்குமே கூறப்படவில்லை. ஒரு பெண் பிரசங்கியையும் நீங்கள் வேதத்தில் காண முடியாது. நிச்சயமாக, அவர்களில் சிலர் தீர்க்கதரிசினிகளும், அது போன்று ஏதாவதொன்றாக இருந்தனர். மிரியாமும் மற்றவர்களும், எஸ்தர் இஸ்ரவேல் ஜனங்களின் மேல் நியாயாதிபதியாக இருந்தாள். (அது தெபொராள் - நியா. 4:4, தமிழாக்கியோன்) சில சமயங்களில் அவர்கள் இராணிகளாக அவர்களை ஆண்டனர் - ராஜா, ராணிகள். ராஜா மரித்தபோது, வேறொரு ராஜா நியமிக்கப்படும் வரைக்கும் ராணி அந்த ஸ்தானத்தில் அமர்த்தப்பட வேண்டியதாயிருந்தது. 22அரிசோனாவிலுள்ள டூசானில், ஒரு பெண் நியாயாதிபதி நகரத்தில் எங்களுக்குண்டு. அதன் காரணமாக நகரம் மாசுபட்டுள்ளது. ஒரு ஸ்திரீக்கு அரசியலில் எந்த வேலையும் கிடையாது. அவளுக்கு சபையால் எந்த வேலையோ அதிகாரமோ கிடையாது. அவளுக்குள்ள இடம் மனிதனின் ராணி என்னும் முறையில் வீடு மாத்திரமே. அதற்கு வெளியில் அவளுக்கு ஒன்றுமேயில்லை. அது உண்மையென்று நாமறிவோம். நீங்கள் எங்குமே காணமுடியாது. அது பழமை நாகரீகங் கொண்டதாய் ஒலிக்கலாம். ஆனால் அதற்கு நான் பொறுப்பு. இவ்வுலகைவிட்டு நான் கடந்து சென்ற பிறகு இந்த ஒலி நாடாக்களும் புத்தகங்களும் நிலைத்திருக்குமென்று நானறிவேன். இப்பொழுது சிறுவர்களாக உள்ள உங்களில் அநேகர் இது முற்றிலும் உண்மையென்பதை வரப்போகும் நாட்களில் அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் நான் கர்த்தருடைய நாமத்தினால் இதை உரைக்கிறேன். 23அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீ, ஒரு நல்ல ஸ்திரீ - விசுவாசமுள்ள, நல்ல தன் கணவனின் முலம் நான் இதுவரை சந்தித்ததில் மிகவும் அருமையான பையன்களை எவ்வாறு இவ்வுலகில் பெற்றெடுக்க முடிந்தது என்று எனக்கு வியப்பு தோன்றுகிறது. அந்த பையன்கள் ஆண்மையுள்ளவர்கள். அவர்கள் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் நூறு சதவிகிதம் அதை ஏற்றுக் கொண்டனர். அது முன் குறித்தலின் மூலம் மாத்திரமே நிகழக் கூடும். அந்த ஒரு வழியில் மாத்திரமே அது நேரிட முடியும். இங்குள்ள கேள்வி என்னவென்றால், நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பாருங்கள், கர்த்தர் என்னை மீண்டும், “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாய் என்பதற்கு கொண்டு வந்துவிட்டார்”. 24அதற்கு நான் செல்வதற்கு முன்பு, சில நாட்களுக்கு முன்பு நான் அளித்த, 'அது இப்பிரஞ்சத்தின் தேவன்' என்று நினைக்கிறேன், செய்தியின் சுருக்கத்தை கூறப் போகின்றேன். அவன் மக்களின் கண்களைக் குருடாக்கிப் போட்ட காரணத்தால், அவர்கள் தங்கள் மத சம்பந்தமான ஆராதனைகளில் பிசாசை முற்றிலுமாக தொழுது கொள்கின்றனர். நீங்கள் அனைவரும் அதை கிரகித்துக் கொண்டீர்களா - உங்கள் எல்லோருக்கும் அது புரிகின்றதா? அதே செய்தியில் நான், நடத்தை கெட்ட உடைகளை நாணயமின்றி உடுக்கும் எந்த பெண்ணும் நியாயத்தீர்ப்பின் போது தெருவிலுள்ள வேசியாக கருதப்பட்டு நியாயத்தீர்க்கப்படுவாளென்று கூறினேன். ஒரு சிறு காட்சியை உதாரணமாக உரைக்க விரும்புகிறேன். 25நகரத்தில் ஒரு இளைய வழக்கறிஞர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அரசியலைப் பொறுத்தவரையில் அவர் மிகவும் நல்லவர். அரசியலில் அவர் ஒருக்கால் நாணயமாக நடந்து கொள்ளக் கூடும். பிறகு அவர் பிரபலமான ஒரு பெண்ணுடன் வெளியே செல்கிறார். அவர்களிருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு மணந்து கொள்கின்றனர். அவர்கள் எல்லா விருந்துகளுக்கும் சென்று ஒன்று சேர்ந்து குடிக்கின்றனர். அவள் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவள், அவர் அண்டை வீட்டில் தங்கியிருக்கிறார். ஜனங்கள் அவரை வெகுவாக மதிக்கின்றனர், ஆனால் அவர்... இருவருமே குடிக்கின்றனர். அவள் குட்டை கால் சட்டை அணிந்து, தலைமயிரை கத்தரித்துக் கொண்டு, அழகு படுத்தும் சாதனங்களை உபயோகிக்கிறாள், மிகவும் கவர்ச்சியாய்... அழகான பெண் - தன்னை இவ்வாறு காண்பிக்கிறாள். அவள் சபைக்குச் செல்வதேயில்லை, இருவருமே, அவர்களுடைய அடுத்த வீட்டுக்கு பாப்டிஸ்டு சபை அல்லது மெதோடிஸ்டு சபையைச் சேர்ந்த ஒரு பெண் குடி வருகிறாள் - அவளும் அவளுடைய கணவனும். இந்த பெண் (அவள் மெதோடிஸ்டு என்று வைத்துக் கொள்வோம். ஏனெனில் மெதோடிஸ்டு பாப்டிஸ்டைக் காட்டிலும் - புதிய ஏற்பாட்டு பாப்டிஸ்டைத் தவிர - அதிகம் பரிசுத்தத்தைக் கடைபிடிப்பவர்கள். அவர்கள் பரிசுத்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். பாப்டிஸ்டுகள் வழக்கமாக பரிசுத்தத்தை கடை பிடிப்பதில்லை, ஏனெனில் அவர்களுக்கு அதில் நம்பிக்கை கிடையாது. எனவே இந்த பெண் மெதோடிஸ்டு என்று வைத்துக் கொள்வோம். ஏனெனில் அவர்கள் பரிசுத்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்). 26ஒரு மெதோடிஸ்டு பெண் அதே தெருவில், மற்ற பெண் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடி வருகிறாள். வழக்கறிஞர் - அவருடைய பெயர் ஜான் - ஊரை விட்டு வெளியே சென்றுள்ள சமயத்தில், இந்த மெதோடிஸ்டு பெண் மற்ற பெண்ணிடம் வருகிறாள். நான் ஜான் என்று கூறினது புனைப் பெயரே. அதை வைத்துக் கொண்டு ஊகிக்கத் தொடங்கிவிடாதீர்கள். இந்த பெண் வழக்கறிஞரை மணம் புரிவதற்கு முன்பு ரால்ஃப் என்பவனுடன் சென்று கொண்டிருந்தாள் (அதுவும் புனைப் பெயரே - இவையனைத்தும், பாருங்கள், இந்த கதையை நீங்கள் புரிந்து கொள்ளவே இவை கூறப்படுகின்றன). முதலாவதாக, குடிக்கும் விருந்து ஒன்றில் ரால்ஃப் அவளைக் கட்டித் தழுவுகிறான். அவளுக்கு அனல் உண்டாகின்றது. அவள் மறுபடியும் ரால்ஃபுடன் காதல் கொள்கிறாள். சிறிது கழிந்து ரால்ஃப் அவளை சந்திக்கத் தொடங்குகிறான். அவள் அதை ஜானுக்கு மறைத்து விடுகிறாள். அவள் மிகவும் சாமர்த்தியமுள்ளவள் என்பதால், அவள் ஜானை மணந்திருந்தாலும், அவர் கண்களுக்கு இதை மறைத்து, ரால்ஃபுடன் பழகலாம் என்று அவள் எண்ணுகிறாள். பாருங்கள், இந்த பெண்ணுக்கு கொஞ்சம் கூட நாணயம் இல்லை. அதெல்லாம் பரவாயில்லையென்று அவள் எண்ணுகிறாள். 27இந்த மெதோடிஸ்டு பெண்ணோ வேறு வழியில் வளர்க்கப்பட்டவள். அவள் சபைக்காகிலும் செல்கிறாள். அந்த பெண் மோசமானவள் என்று அவள் எண்ணினாள். அவளுடைய கணவர் திரும்பி வந்தவுடன் அவள் பாருங்கள், ஜான் வழக்கு விஷயமாக பிலதெல்பியா மற்றும் வேறு இடங்களுக்கு சென்றுள்ள போது, இவன் வந்து அவளை சந்திப்பதைக் காண்கிறேன். அவன் அவளைக் காரில் கொண்டு செல்கிறான். அவர்கள் இருவரும் கடற்கரையில் படுத்துக் கிடக்கின்றனர். அவர்கள் வீடு திரும்பின பிறகு, “சில சமயங்களில் திரையையும் கூட இழுத்து மூடாமல் அவன் அவளுக்கு முத்தம் கொடுத்து காதல் பண்ணுகிறான். அது பயங்கரமல்லவா? அவள் வேசியேயன்றி வேறொன்றுமல்ல” என்கிறாள். அது உண்மை. அவள் வேசியைக் காட்டிலும் மோசமானவள், ஏனெனில் அவள் விவாகமானவள். பாருங்கள்? இந்த பெண், மொதோடிஸ்டு பெண், அது பயங்கரம் என்று எண்ணுகிறாள். மற்ற பெண் சபைக்கு செல்வதேயில்லை. 28இந்த மெதோடிஸ்டு பெண் அத்தகைய செயலைப் புரியமாட்டாள். நிச்சயமாக செய்ய மாட்டாள். அவள் நாணயமானவள். வேறொரு காரியம், அவள் மதுவைத் தொடவே மாட்டாள். ஏனெனில் மெதோடிஸ்டு சபை - அவர்களுடைய திட்டங்களில் 90 சதவிகிதம் மதுவிலக்குக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது. அவர்களுக்கு மதுவிலக்கு திட்டமொன்று உள்ளது. மெதோடிஸ்டு சபையிலுள்ள இவர்கள் சபை போதிப்பதைத் தவிர வேறெதையும் கூடுதலாகக் கைக் கொள்வதில்லை. ஆனால் இதே மெதோடிஸ்டு பெண் ஞாயிறு பள்ளி கழிந்த பின்பு ஞாயிறு மாலை வேளையில் தன் கணவருடன் குட்டைகால் சட்டை அணிந்து செல்கிறாள். அவள் தலைமயிரைக் கத்திரித்துக் கொண்டும், உதடு சாயம் பூசிக்கொண்டும், சிறிது புகை பிடிக்கவும் செய்கிறாள். இப்பொழுது, தேவனுடைய வார்த்தையின்படி, இவ்விருவருமே வேசிகள். ஆனால் இங்குள்ள இவள் நிர்ப்பாக்கியமுள்ளவளாயும், பரிதபிக்கப்படத் தக்கவளாயும், குருடாயும், நிர்வாணயுமாயிருப்பதை அறியாமலிருக்கிறாள். ஒருத்தி மற்றவளைப் போலவே குற்றவாளி. ஏனெனில் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று (மத். 5:28). 29இந்த பெண், “சற்று பொறுங்கள், சகோ. பிரான்ஹாம். நான் வேசியல்ல என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பாள். என் சகோதரியே, உன்னை வேதாகமத்திற்கு முன்பு கொண்டு நிறுத்தினால், ஒருக்கால் அதன் மேல் உன் கைகளை தேவனுடைய சமுகத்துக்கு முன்பாக வைத்து, உன் கணவருக்கு நீ உத்தமமாய் வாழ்ந்து வந்தாயென்று நீ ஆணையிடலாம். உன் சரீரம் உன் கணவருக்கு சொந்தமானது. உன் ஆத்துமாவோ தேவனுக்குச் சொந்தமானது. ஒரு பொல்லாத ஆவி உன்னை அபிஷேகித்துள்ளது. இல்லையென்றால், உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென்று என்னால் நிரூபிக்க முடியும். உன் பாட்டி அப்படிப்பட்ட குட்டை கால் சட்டை உடுத்தி தெருவில் சென்றிருந்தால், அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும்? அவர்கள் பைத்தியக்கார விடுதியில் கொண்டு போய் சேர்த்திருப்பார்கள் - ஆடையில்லாமல் வெளியே நடந்து சென்றிருந்தால், அவர்களுக்கு புத்தி மாறாட்டம் ஏற்பட்டிருக்கும். அன்று அப்படியிருந்தால், இன்றும் அப்படி இருக்க வேண்டும். எனவே அது முழு உலகத்தையும் பைத்தியத்தில் ஆழ்த்துகின்றது. முழுவதுமே பைத்தியமாயுள்ளது. அது படிப்படியாக உள்ளே நுழைந்துவிட்டது. ஜனங்கள் அதை அறியாமலிருக்கின்றனர். 30அவள் ஒரு வேசியா? அவள் தன் சரீரத்தை தன் கணவருக்கு பொருத்தனை செய்த விஷயத்தில் அல்ல, ஆனால் தேவனுக்கு முன்பாக அவள் ஒரு பொல்லாத வேசி ஆவியினால் பீடிக்கப்பட்டு, அது அவளை இவ்வாறு உடுக்கும்படி தூண்டுகிறது. அவள் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருந்து கொண்டு, அவள் அவ்வாறு செய்வதை அறியாமலிருக்கிறாள். குற்றமில்லாத அந்த ஸ்திரீயை தேவன் வேசித்தனக் குற்றத்திற்காக நியாயந்தீர்ப்பார். பார்த்தீர்களா? நீங்கள் அவளிடம் கூறிப் பாருங்கள்! அவளிடம் கூறவே முடியாது. அவளுக்கு இதை எடுத்துக் கூற வழியேயில்லை, அவர்கள் நிர்வாணிகளாயிருப்பதை அறியாமலிருக்கின்றனர் என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் அவளை வேசியென்று தனிப்பட்ட விதத்தில் அழைத்தால், அவள் உங்களை சிறைக்கு அனுப்பிவிடுவாள், அவள் செய்வாள். நான் யாரைக் குறித்தும் தனிப்பட்ட விதத்தில் பேசுவதில்லை. நான் பாவத்தைக் குறித்து பேசுகிறேன். நான், இந்த குறிப்பிட்ட சபை, இங்குள்ள திரு. இன்னார், இன்னார், சங்கை இன்னார், இன்னார், அவர் ஒரு... என்று கூறுவதில்லை. இல்லை, நான் அப்படி. கூறுவதில்லை. அந்த முழு அமைப்பின் உபதேசத்தைக் குறித்தே கூறுகிறேன்... நான் தனிப்பட்ட நபர்களைக் குறிப்பிடுவதில்லை. அது தனிப்பட்ட நபர்கள் அல்ல, அது அவர்கள் சேர்ந்துள்ள அமைப்பு, அது உலக அமைப்பு. 31இங்கு உட்கார்ந்திருக்கும் ஜார்ஜ் ரைட், அவருக்கு 75 அல்லது 78 வயதிருக்குமென்று நினைக்கிறேன். அவருக்கு மணமாவதற்கு முன்பு அவர் ஒரு நாள் சகோதரி ரைட்டை காணச் சென்றிருந்தபோது, அவர்கள் குட்டை கால் சட்டை அணிந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டிருந்தால் என்ன செய்திருப்பார்? அவர் அவர்களை ஒருக்காலும்... நீங்கள் அவர்களை சிறையிலடைத்திருப்பீர்கள். நீங்கள் அவர்களை மணந்திருக்க மாட்டீர்கள். அக்காலத்திலிருந்த எந்த வாலிபனும் அதை தான் செய்திருப்பான், அது தான் நடந்திருக்கும். அது அன்று பாவமும் தவறாயும் இருந்திருக்குமானால், இன்றும் அப்படியே இருக்க வேண்டும். ஆனால் ஜனங்கள் பைத்தியமாக வளர்ந்துவிட்டார்கள். 32ஒன்றை, அது நிறைவேறுதற்கு முன்பு, உங்களிடம் தீர்க்கதரிசனமாக உரைக்க விரும்புகிறேன். முழு உலகமே பைத்தியம் பிடித்து இருளில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அது இன்னும் மோசமாக, மோசமாக, மோசமாக ஆகும். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அது பைத்தியம் பிடித்தவர்களின் கூட்டமாயிருக்கும். இன்றைக்கும் ஏறக்குறைய அவ்வாறேயள்ளது. ஒரு மனிதன் காரின் விளக்குகளைப் போட்டுக் கொண்டு சாலையில் தவறான பக்கத்தில் காரோட்டுவதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஒரு ரிக்கி, மேல்நிலைப் பள்ளி முடித்துவிட்டு இப்பொழுது தான் வெளிவந்த ஒரு வாலிபன், ஜனங்களை விபத்துக்குள்ளாக்கி கொல்கிறான், அது அவர்களை நிறுத்தினதா? அவனுக்கு பின்னால் வந்த வேறொருவன் அதையே செய்தான். ஒரு வாலிபன் தன்னை ஏதோ ஒருவனாக பாவித்துக் கொண்டு இங்கு வந்து இப்படி நடந்து கொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இளமைப் பருவம் பூத்துக் குலுங்கும் ஒரு இளம் பெண், அழகானவள், நல்ல தேகக்கட்டும் அமைப்பும் கொண்டவள், அழகான முகமுடையவள், அவளுடைய அழகே நாம் முடிவு காலத்திலிருக்கிறோம் என்பதற்கு அறிகுறியாயுள்ளது. பாருங்கள், அவள் முழுவதுமாக உலக காரியங்களுக்கு சென்றுவிட்டாள், பரிசுத்த அலங்காரத்துக்கோ, அவள் ஆத்துமாவின் இனிமைக்கோ அல்ல. நான் சில பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய வெளிப்புறத்தில் ஒரு அழகுமில்லை, ஆனால் அவர்களிடம் ஒரு முறை பேசிப் பாருங்கள், சில நிமிடங்கள் பேசிப் பாருங்கள், அவர்கள் உண்மையில் அப்பட்டமானவர்கள், நீங்கள் விலக முடியாத ஏதோ ஒன்றுள்ளது. பாருங்கள், வெளிப்புற அழகு பிசாசினால் உண்டானது; அது உலகத்தைச் சார்ந்தது. 33காயீனின் பிள்ளைகளைப் பாருங்கள், மற்றவர்கள் அதில் எவ்வாறு விழுந்தனர் என்று. தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டபோது, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள் (ஆதி. 6:2). தேவன் அவர்களை மன்னிக்கவேயில்லை. பாருங்கள், இஸ்ரவேல் ஸ்திரீகள் பணியெடுத்து கைகளில் தழும்புகள் கொண்டவர்களாயும், மெலிந்த தலைமயிர் உடையவர்களாயும் இருந்தனர். இந்த தேவகுமாரர் மோவாப் தேசத்தின் வழியாய் சென்றபோது நன்றாக சீவின தலைமயிரும், முகங்களில் வர்ணமும் தீட்டின அழகான பெண்களைக் கண்டனர். அவர்கள் கண்டபோது கள்ளத்தீர்க்கதரிசி ஒருவன், “நாமெல்லாரும் ஒன்று தான்,” என்று கூறினான். இவர்கள் அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண் கொண்டனர். தேவன் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவில்லை. அவர்கள் வனாந்திரத்தில் அழிந்து போயினர். அவர்கள் ஒவ்வொருவரும் மரித்துப் போயினர். அவர்கள் நம்பிக்கையற்றவர்களாய், தேவனற்றவர்களாய், நித்தியமாய் இழக்கப்பட்டு, என்றென்றைக்கும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டனர், அவர்கள் தேவனுடைய நன்மையை கண்ட பின்பும், என்றென்றும் உலராத ஊற்றிலிருந்து தண்ணீர் குடித்த பின்பும், அவர்கள் அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த தண்ணீரைக் குடித்தனர். வெண்கல சர்ப்பம் அற்புதங்கள் செய்வதை அவர்கள் கண்டனர். அவர்கள் சிவந்த சமுத்திரத்தின் வழியாக கடந்து மோசேக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அவர்கள் தேவனுடைய கரத்தைக் கண்டனர். அவர்கள் தூதர்களின் அப்பத்தைப் புசித்து. இவையனைத்தும் செய்தனர். இருப்பினும் அவர்கள் அந்த பெண்களை மணந்து கொண்டனர். பெண்களைக் கொண்டு வரும்படி செய்து, அவர்களுக்குள்ளே பெண் கொண்டு மணந்தனர். அவர்கள் விபச்சாரம் செய்யவில்லை, அவர்களை மணம் மாத்திரமே புரிந்து கொண்டனர். தேவன் அவர்களை அதற்காக மன்னிக்கவேயில்லை. 34இது இரண்டாந்தரம் நிகழ்கிறது. நாம் மூன்றாந்தரம் நிகழ்வதைக் காணப் போகிறோம்; இது மிகவும் வஞ்சிக்கக் கூடியது. இது கடினமென்று நானறிவேன். இது எப்படியிருக்கப் போகின்றது என்று நான் பலமுறை வியந்ததுண்டு. நான் ஏன் ஜனங்களிடம் உண்மையை எடுத்துக் கூற வேண்டும்? அதை செய்வது எது? அது தேவனாயிராமல் போனால், இங்கு யாருமே இருக்கமாட்டார்கள். ஒரு பெண்ணும் கூட இங்கு உட்கார்ந்து கொண்டு நான் கூறுவதைக் கேட்கமாட்டாள். ஆனால் அவர்கள் மறுபடியும் கூட்டத்துக்கு வருகின்றனர்! ஏனெனில் அது உண்மையென்று அறிந்து கொள்ள சிலருடைய உள்ளங்களில் சத்தியம் நங்கூரமிடப்பட்டுள்ளது. என்னவாயினும், அது உண்மையென்று அவர்கள் அறிந்துள்ளனர். இப்பொழுது என்ன நடக்கிறதென்று கவனியுங்கள். இது கடினமென்று நானறிவேன். 35இது மருத்துவர் உங்களுக்கு மருந்து கொடுத்து நீங்கள் அதை உட்கொள்ள மறுப்பது போன்றது. நீங்கள் மரிக்க நேரிட்டால், மருத்துவரை குறை கூறாதீர்கள். இது மருந்தைப் போன்றது. நான் பெண்களை வெறுப்பவன் என்று என்னை எப்பொழுதும் குறைகூறிக் கொண்டிருப்பவர்களைக் குறித்தென்ன? பாருங்கள், இந்த பெண்கள் நடந்து கொள்ளும் விதத்தைக் கவனியுங்கள், சபை எந்நிலையிலுள்ளது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். இந்த பெண்களின் நடத்தை இவ்வுலக லவோதிக்கேயாவில் சரீரப்பிரகாரமாக - நிர்வாணமாயும், பரிதபிக்கப்படத் தக்கதாயும், குருடாகவும் இருந்து, அவர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். ஜனங்கள், இவ்வுலகத்தின் பெண்கள், சபை இவ்வனைத்துமே ஒரே நிலையில் உள்ளன. ஒவ்வொரு முறையும் மாம்சத்துக்குரியது ஆவிக்குரியதற்கு அமைந்துள்ளதை கவனியுங்கள். என்றாவது ஒருநாளில் நியாய ஸ்தலத்தில்... 36நான் கூறுவது பிரபலமாயிராது என்று எனக்குத் தெரியும். அதைக் கூற ஒரு மனிதன் நியமிக்கப்படாவிட்டால், அதை கூறாமலே விட்டுவிடுவது நல்லது. ஏனெனில் நீங்கள் ஆள்மாறாட்டம் செய்பவர்களாயிருப்பீர்கள், நீங்கள் நிச்சயம் தொல்லைக்குள்ளாவீர்கள். இப்பொழுது கவனியுங்கள், நான் உண்மையில் ஒரு பெண்ணின் வாயைத் திறந்து அதற்குள் மருந்து ஊற்றிவிட்டு, அவள் அதை துப்பிவிடக் கூடாதென்று கருதி, என் கைகளால் அவள் வாயைப் பொத்துகிறேன். ஒரு மருத்துவர் நோயாளிக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு, நோயாளி அதை உட்கொள்ள மறுத்ததன் விளைவாக மரித்துப் போகிறான். நியாய ஸ்தலத்தில் தலைமயிர் கத்தரித்தல், குட்டை கால் சட்டை அணிதல் போன்ற குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும்போது... 37நான் கட்டிடம் கட்ட மாத்திரம் செய்கிறேன். ஏதோ ஒன்று நடப்பதை நீங்கள் காணப் போகும் நேரம் மிக அருகாமையிலுள்ளது. ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது. இங்குள்ள இந்த பின்புறக் காட்சி அனைத்தும் ஒரு குறுகிய, வேகமான செய்திக்கு அடிக்கல்லை நாட்டுவதாக அமைந்திருக்கும். அந்த செய்தி முழு தேசத்தையுமே குலுக்கும். நான் ஏன் பெண்களைத் தெரிந்து கொண்டு பேசுகிறேன். உங்கள் தலையை அடிப்பதற்கு இங்கு ஒன்று கிடக்கிறது. அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதற்கும் கூட. என் கையை அவர்கள் வாயின் மேல் இப்படி வைக்கிறேன். இருந்தும், அவர்கள் துப்பிவிடுகிறார்கள். அப்படியிருக்க, யார் மருத்துவரை குறை கூறமுடியும்? அதற்கு விரோதமாக கூக்குரலிட்ட சத்தங்கள் பதிவு செய்யப்பட்டு நியாயத்தீர்ப்பின் நாளன்று ஜனங்களுக்கு முன்பாக போட்டு காண்பிக்கப்படும் போது, நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள்? அதிலிருந்து நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்ளப் போகின்றீர்கள்? 38உங்கள் விரல்களுக்கு நடுவே அதை உமிழ்ந்து விடுகின்றீர்கள். இன்னும் கொஞ்சம் மருந்தை வாய்க்குள் ஊற்றி, தலையை குலுக்கி, நடந்து சென்று, திரும்பவும் வந்து - அதனால் உபயோகமில்லை. இருப்பினும், திரும்பி வந்து மறுபடியும் ஊற்றுகிறேன். அப்படியானால் யாரைக் குறை கூறுவது? மருத்துவரையல்ல, மருந்தையல்ல, நபரின் மனப்பான்மையை. அது முற்றிலும் உண்மை. இந்நாட்களில் ஒன்றில், இந்த பாவமுள்ள விபச்சார சந்ததி சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நிற்கும்போது, அது பயங்கரமான நாளாயிருக்கும். 39எனக்கு வயதாகிக் கொண்டே சென்று, என் தோள்கள் தொங்குகின்றன. எனக்குத் தெரியும். இந்தமேடையின் மேல் 30 ஆண்டுகள், சுவிசேஷ ஊழியத்தில் 33 ஆண்டுகள். அது நீண்ட ஆயுசு. 33 ஆண்டுகள் ஊழியம். எனக்கு ஒரே ஒரு வருத்தம் மாத்திரமேயுண்டு. அதாவது என்னால் 133 ஆண்டுகள் ஊழியம் செய்ய முடியவில்லையே என்று. இந்த மானிட சரீரத்தில் இங்குள்ளபோது, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எனக்கு கிடைக்கப் பெறும் கடைசி தருணம் இதுவே. இந்த வார்த்தைக்கு கூடுமான வரையில் உண்மையாக நிற்க; அவர் கூறினவாறே கூற தேவன் எனக்குதவி செய்வாராக. அந்த மெதோடிஸ்டு பெண்ணிடம் நீங்கள் எப்படி இதைக் கூற முடியும்? அவள் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறாள். 40இப்பொழுது நாம் பெந்தெகோஸ்தே பெண்ணை எடுத்துக் கொள்வோம். அவள் குட்டை கால் சட்டை அணியமாட்டாள், அழகுபடுத்தும் பொருள்களை உபயோகிக்கமாட்டாள். அவள் மெதோடிஸ்டு பெண்ணைப் பார்த்து. பாருங்கள், அவள் இன்னின்னதை செய்கிறாள் என்கிறாள். அவள் குட்டை கால்சட்டை அணிவதில்லை என்பது உண்மையே. ஆனால் அவள்... அவளே குட்டை தலைமயிருடன் காணப்படுகிறாள். நீங்கள் தேவனில் உயர எழும்பும்போது. எல்லாமே அதிக பாவமுள்ளதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் உயர வேறொரு பிரதேசத்துக்குள் என்னை கொண்டு சென்றுவிடுகிறார். அப்பொழுது எல்லாமே தாறுமாறாகக் காணப்படுகிறது. நான் மறுபடியும் கீழே வரும் போது, ஜனங்களின் பார்வையில் நான் அயோக்கியனாக காணப்படுகிறேன். நான் கடிந்து கொள்ளும் ஒரு... நான் மூடனாகக் கருதப்படுகிறேன். ஏனெனில் நான் ஒரு பைத்தியக்கார வயோதிபனாக அங்கு நின்று கொண்டு, ஜனங்களை எப்பொழுதும் கடிந்து கொள்பவனாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு முறையாவது அந்த பிரதேசத்துக்கு ஏறி, தேவனுடைய சமுகத்தில் செல்வீர்களானால் - உணர்ச்சிவசப்படுவதனால் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களை உண்மையாக உயரக் கொண்டு செல்லும் போது, எல்லாமே “இக்கபோத்” என்று எழுதப்பட்டுள்ளது (1சாமு. 4:21). கர்த்தருடைய மகிமை அனைத்து ஸ்தாபனங்களையும் விட்டுப் போய்விட்டது. அது உண்மை. அவர்கள் யாருமே சரியல்ல. 41இப்பொழுது, ஒரு சிறு வட்டத்தை வரையப் போகிறேன். எனக்கு கரும்பலகை இருந்தால்... இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். ஒரு வட்டத்தை இங்கு வரையப் போகின்றேன். அதற்குள் மற்றொரு வட்டத்தை வரையப் போகின்றேன். இரண்டு வட்டங்கள். அந்த உள் வட்டத்திற்குள் மற்றொரு வட்டத்தை வரையப் போகின்றேன், மொத்தம் மூன்று வட்டங்கள். அது நீங்கள், அது தேவன் திரித்துவத்தில் தேவன் ஒருவர். திரித்துவமில்லாமல் அவர் தேவனல்ல. அவர் வேறெந்த விதமாகவும் வெளிப்பட முடியாது. அது போன்று நீங்களும் திரித்துவமாக அல்லாமல் வேறெந்த வகையிலும் வெளிப்பட முடியாது - அதாவது, சரீரம், ஆவி, ஆத்துமா இவைகளைக் கொண்டவர்களாக. இவைகளில் ஒன்று இல்லாமல் போனாலும் நீங்கள் முழுமை அடைய முடியாது. பாருங்கள்? உங்களுக்கு ஆத்துமா இல்லையென்றால், நீங்கள் ஒன்றுமேயில்லை. உங்களுக்கு சரீரம் இல்லையென்றால், நீங்கள் ஆவியாக இருப்பீர்கள். எனவே தேவன் மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரே ஆளாக இருக்கிறார், மூன்று ஆட்கள் ஒன்று சேர்வதல்ல. ஆனால் மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரே ஆள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, வெளிப்பட்ட ஒரே உண்மையான தேவன். தேவன்... 42இங்கு கவனியுங்கள்... சற்று பொறுங்கள். இதை சில நிமிடங்களுக்கு முன்பு படித்தேன் என்று நினைக்கிறேன். இதை கேளுங்கள். “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில், உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது, தேவனே சிருஷ்டி கர்த்தராயிருக்க, அவர் எப்படி சிருஷ்டிக்கப்பட்டார்? ஆனால் இது தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியாயுள்ள ஒன்று. ஆவியாயிருக்கிற தேவன் மனித உருவில் சிருஷ்டிக்கப்பட்ட போது, அது தான் சிருஷ்டிக்கப்பட்ட தேவன். சிருஷ்டி கர்த்தராகிய தேவன் தாமே சிருஷ்டியாக ஆதல். மண்ணையும், சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், விண்வெளி வெளிச்சம் (Cosmic light), பெட்ரோலியம் ஆகியவைகளையும் சிருஷ்டித்த தேவன், அவைகளை ஒன்றாக எடுத்து தம்மை சிருஷ்டித்துக் கொண்டு, தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆதியானார் - ஆமென், முடிவானவர். ஆமென் என்றால், ”அப்படியே ஆகக்கடவது“ என்று பொருள். தேவனுடைய முடிவானது - (Ultimate), தேவன் தமது சிருஷ்டிப்பில் பூரணமடைதல். அது எப்படி? தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோவான். 1:18). உங்களுக்கு விளங்குகிறதா? 43ஒரு நிமிடம். உங்களுக்கு அவசரமில்லை என்று நினைக்கிறேன். இப்பொழுது நாம் ஒரு நிமிடம் கொலோசெயர் நிருபத்துக்கு திருப்புவோம். ஒரு வேத பாகம் என் மனதில் தோன்றினது. இப்பொழுது கொலோசெயர் நிருபத்துக்கு திருப்புவோம். முதலாம் அதிகாரம் என்று நினைக்கிறேன். நான் பார்த்து தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதை நான் முன்கூட்டியே தீர்மானித்து எழுதி வைக்கவில்லை. நான்... முன்பெல்லாம், நான் வாலிபப் பிரசங்கியாயிருந்த போது, எனக்கு உடனடியாக இவ்வசனங்கள் ஞாபகத்துக்கு வருவது வழக்கம். ஆனால் வயதாகுந்தோறும், என்னால் முடியவில்லை. நாம் 9-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம், அது தான் என்று நினைக்கிறேன். “இதினிமித்தம், (பவுல் கொலோசெயருக்கு, கிறிஸ்து யாரென்பதை எடுத்துரைக்கிறான்). “இதினிமித்தம் நாங்கள் அதைக் கேட்ட நாள் முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம், நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகல வித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்து கொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம். (அந்த பாகத்துக்கு இப்பொழுது வருகிறோம். கவனியுங்கள்) (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும் (விளங்குகிறதா? 15-ம் வசனம். கொலோ. 1:15) சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஆமென்! அவர் யார்? சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். அது தேவ தூதனாயிருந்தாலும், யாராயிருந்தாலும் சரி. அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்குள்ளும் சிருஷ்டிக்கப்பட்டது. 44அது எதுவாயிருந்தாலும் சரி, வேறு யாரும் சிருஷ்டிக்கவில்லை, கவனியுங்கள், முந்தினவர், எல்லாம், அவர் எல்லாவற்றிற்கும் அவருக்குள் நிலைநிற்கிறது. அது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, எதுவாயிருந்தாலும். அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான வஸ்துக்களும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே, இந்த தேவனுடைய குமாரன் இருந்தார். அது சரியா?சிங்காசனங்கள், கர்த்தத்துவங்கள், பரலோகத்திலுள்ள சிங்காசனங்கள், ராஜ்யங்கள் அது எதுவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அப்பாலுள்ள அந்த மகத்தான இயற்கைக்கு மேம்பட்ட இடத்தில், நித்தியத்தில், அது எதுவாயிருந்தாலும், தேவ தூதர்களானாலும், தேவர்களானாலும், எதுவாயிருந்தாலும், “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்,” ஆமென்! உங்களால் அதை காணமுடியவில்லையா? அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர். “சகலமும் அவரைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டது”. அவர்... இப்பொழுது 17-ம் வசனம். அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது. 45அவரைத் தவிர வேறு எவருமே, அதை இயங்கச் செய்ய முடியாது. அது தேவனாகிய பிதாவாயிருந்தாலும், தேவனாகிய பரிசுத்த ஆவியாயிருந்தாலும்; அது தேவ தூதர்களானாலும்,கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், அது எதுவாயிருந்தாலும் - எல்லாமே அவரால் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாமே அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர், எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் (அவரே ஆதி) மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (அவர் மீட்க வந்தபோது உயிரோடெழும்பின போது). முதல்வர் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பவர். சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பவர். தூதர்கள், எல்லா சிருஷ்டிகள், உள்ள எல்லாவற்றிற்கும் மேல்... அவர் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பவர். அப்படி எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் இவர் யார்? மற்றும் சமாதானமானதை செய்து,... நாம் அதை பார்க்கலாம் ஒரு நிமிடம். ''சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்'', சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும் எல்லாவற்றின் பரிபூரணமும், தேவனுடைய பரிபூரணமும், தேவ தூதர்களின் பரிபூரணமும், காலத்தின் பரிபூரணமும், நித்தியத்தின் பரிபூரணமும் - எல்லாமே அவருக்குள் வாசமாயிருக்கிறது. அப்படிப்பட்டவர் தான் இவர். அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. அப்படிப்பட்ட தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவரைக் குறித்து தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 46சபையானது - அவருடைய முழு நோக்கமே சபைதான். நாம் எப்படி இந்த சபைக்குள் வரமுடியும்? ஒரே ஆவியினால் நாமெல்லாரும் அந்த ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்... சபை, கிறிஸ்துவின் சரீரம், அது ஒருக்காலும் தவறாது. இதுதான் நடக்கிறது. இப்பொழுது வரையப்பட்டுள்ள இந்த சிறு படத்தை கவனியுங்கள். மாமிசம் தான் வெளிப்புற மனிதன். அந்த சரீரத்தை தான் நாம் காண்கிறோம். அதற்கு ஐந்து உட்குழாய்கள் உள்ளன. என்னைப் போன்று ஆரம்பப் பள்ளியில் படித்த எந்த பிள்ளைக்கும், பார்த்தல், ருசிபார்த்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்னும் ஐம்புலன்கள் சரீரத்தில் ஆதிக்கம் கொண்டுள்ளன என்று தெரியும். அவையில்லாமல் நீங்கள் சரீரத்தை அணுக முடியாது. பார்த்தல், ருசிபார்த்தல், உணருதல், முகர்தல், கேட்டல் என்னும் ஐம்புலன்களின் வழியாகத்தான் நீங்கள் சரீரத்தை அணுக முடியும். அதன் மூலம் பார்த்தல், அதைக் கொண்டு ருசிபார்த்தல், அதன் மூலம் தொட்டு உணருதல், வெளிப்புறத்திலுள்ள இது பொல்லாங்கானது. 47அதற்குள் இருப்பது ஆவி. நீங்கள் இவ்வுலகில் பிறக்கும் போது, அதுவாக ஆகிவிடுகிறீர்கள். ஜீவ சுவாசம் உங்களில் ஊதப்படுகிறது - அந்த ஆவி உலகப் பிரகாரமானது. ஏனெனில் அது தேவனிடமிருந்து வரவில்லை. அது தேவனால் அனுமதிக்கப்பட்டு, அளிக்கப்பட்டது. உங்களுக்கு விளங்குகிறதா? இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுவதாய் இவ்வுலகில் வருகின்றது. அது சரியா? எனவே அந்த நபர், அங்கே உள்ளே, தொடக்கத்திலேயே பாவியாயிருக்கிறான். அதற்கு ஐந்து உட்குழாய்கள் உள்ளன (அவைகளை ஞாபகத்திலிருந்து எனக்கு கூற முடியுமோ என்று தெரியவில்லை). முதலில் சிந்தை என்று ஞாபகமுள்ளது. பிறகு மனச்சாட்சி, அன்பு - தேர்வு, சிந்தனை, மனச்சாட்சி, அன்பு, விவேகம் - இவைகள் ஆவிக்குள்ள ஐந்து உட்குழாய்கள். உங்கள் சரீரத்தினால் நீங்கள் சிந்தனை செய்ய முடியாது. உங்கள் ஆவியினால் மாத்திரமே நீங்கள் சிந்தனை செய்ய முடியும். உங்கள் சரீரம் மனச்சாட்சியை கொண்டிருக்க முடியாது. அதற்கு மன சம்பந்தமான இயல்புகள் கிடையாது. எனவே உங்கள் ஆவியினால் மாத்திரமே நீங்கள் சிந்தனை செய்ய முடியும். சரியா தவறாவென்று பாகுபடுத்தும் விவேகமும் உங்கள் சரீரத்தில் இல்லை. உங்கள் சரீரத்தைக் கொண்டு நீங்கள் விவேகிக்க முடியாது. ஏனெனில் விவேகத்துக்கு பார்த்தல், ருசிபார்த்தல், முகர்தல், கேட்டல் போன்ற புலன்கள் கிடையாது. விவேகம் மனதைக் கொண்டு நடத்தப்படும் செயலாகும் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, உங்கள் சரீரம் அங்கு அசைவற்று கிடக்கிறது. ஆனால் உங்கள் ஆவியோ அப்பொழுதும் விவேகிக்க முடியும் - உள்ளான மனிதனிலுள்ள ஐம்புலன்களின் மூலம். இப்பொழுது கடைசி மனிதனாகிய ஆத்துமா. அதை கட்டுப்படுத்துவது ஒரு புலன் மாத்திரமே. அது தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள அல்லது நிராகரிக்க அதற்குண்டான சுயாதீன சித்தம். 48இன்றைய ஜனங்கள் இவ்வாறு நடந்துகொள்ளும் காரணம், இதை மறந்து போக வேண்டாம். அப்பொழுது நீங்கள் பரிசுத்த பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஆரம்ப அடையாளம் என்னவென்பதை கண்டுகொள்வீர்கள். ஜனங்கள் ஆவியில் வாழ்ந்து, ஆவியில் நடனமாடலாம். அவர்கள் ஆவியில் சத்தமிடுகின்றனர். அவர்கள் ஆவியில் சபைக்கு செல்கின்றனர். அவர்கள் உண்மையான தேவனுடைய ஆவியினால் முற்றிலுமாக அபிஷேகம் பண்ணப்பட்டு அதை தங்கள் ஆவியின் மேல் கொண்டிருக்க முடியும். இருப்பினும் அவர்கள் இழக்கப்பட்டு, பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்க முடியும். ஏனெனில்... கவனியுங்கள், அதனால் தான் அந்த பெண்ணிடம், அவள் குட்டை கால் சட்டை அணிவது தவறென்று உங்களால் எடுத்துக் கூற முடிவதில்லை. அவள் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்வது தவறென்று அவளிடம் கூற முடிவதில்லை. “தலைமயிருக்கும் இதற்கும் சம்பந்தமென்ன?” சிம்சோனுக்கு சம்பந்தம் உண்டாயிருந்தது. “எவனும் இதனுடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால், அல்லது இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால்...” இதற்கு எங்காகிலும் ஒரு முடிவு (Ultimate) இருக்க வேண்டும். 49உதாரணமாக நான் பாப்டிஸ்டு மனிதன் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் என்னிடம் வந்து, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுகின்றீர்கள், அது வேதாகமத்தில் உள்ளது. நான் உடனே, “என் போதகரைக் கேட்டுப் பார்க்கிறேன்” என்கிறேன். என் போதகரை நான் அணுகும்போது அவர், “ஓ, அது முன் காலத்தில் கொடுக்கப்பட்டது. பாப்டிஸ்டுகளாகிய நாம் விசுவாசிப்பது இதுவே, அதாவது, நாம் பட்டங்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் தண்ணீர் முழுக்கு பெற வேண்டும். அப்படித்தான் எல்லா சபைகளும் செய்து வந்தன. ஜான் ஸ்மித் இதை நிறுவின முதற்கு, அப்படித்தான் அது செய்யப்பட்டு வருகிறது என்பார்”. நல்லது, அதுவே உங்கள் முடிவு. ஆனால், “தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறது என்பதுடன் அதை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை!” 50நீங்கள் மெதோடிஸ்டாக இருந்தால், தெளிக்கப்படுதலே நீங்கள் கடைப்பிடிக்கும் முறைமை. நீங்கள் தண்ணீர் முழுக்கு பெற வேண்டுமென்று உங்களிடம் கூறப்பட்டால்! நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? நீங்கள் மெதோடிஸ்டு போதகரை அணுகி சந்தேகம் கேட்கிறீர்கள். அவர் உடனே பேராயருக்கு கடிதம் எழுதி, “இன்னார் இன்னார் இப்படி கூறுகிறார்” என்று தெரிவிக்கிறார். அவர், நம்முடைய மெதோடிஸ்டு சபை இங்கிலாந்தில் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜான் வெஸ்லியால் நிறுவப்பட்டது; மற்றும் வைட் ஃபீல்டு, ஆஸ்பரி போன்றவர்கள். நாம் தெளிக்கப்பட வேண்டும் என்னும் சாசனம் ஜான் வெஸ்லியைப் பின்பற்றி எழுதப்பட்டது. அது வெளிப்புறமான சடங்கு மாத்திரமே. தண்ணீர் முழுக்கைப் போலவே தெளிக்கப்படுதலும் ஒரு நல்ல ஆசாரம் தான்“ என்று கூறிவிடுகிறார். மெதோடிஸ்டு சபைதான் உங்கள் முடிவாயிருக்குமானால், உங்களால் அவ்வளவு தூரம் தான் செல்ல முடியும். நீங்கள் கத்தோலிக்கராக இருந்தால்... நான் உங்களுக்கு சொல்லுகிறேன், வெள்ளிக் கிழமையில் இறைச்சி புசிக்கக் கூடாது போன்றவை வேதாகமத்தில் கிடையாது. பரிசுத்த யூகா ரிஸ்ட் என்பது ஒரு மெல்லிய அப்பம் (Water) அல்ல, அது ஒரு ஆவி, நீங்கள் உங்கள் குருவானவரிடம் செல்வீர்களானால் அவர், “இதோ, அது நமது சாசனத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது” என்பார். சபைதான் உங்கள் முடிவாக இருக்குமென்றால், மற்றவர்கள் என்ன கூறினாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அதுவே உங்களுக்கு முடிவானது. ஓ, தேவனே, இது ஆழமாகப் பதிய உதவி செய்வீராக! என்னைப் பொறுத்தவரையில், அது அனைத்தும் தவறு. தேவனுடைய வார்த்தை மாத்திரமே முடிவானது. வார்த்தை என்ன கூறுகிறதோ, அதுவே உண்மை. 51இந்த வட்டங்களில், இந்த சிறு உள்ளான மனிதனாக நீங்கள் இருக்கக் கூடிய ஒரே வழி, நீங்கள் முன் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் தேவனுடன் கூட இருந்தபடியினால், தேவனுடைய ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நான் என் தந்தைக்குள் இருந்தேன். நான் என் பாட்டனாருக்குள்ளும், பாட்டனாரின் பாட்டனாருக்குள்ளும் இருந்தேன். வித்தாக நான் அவர்களுக்குள் இருந்தேன். அவ்வாறே நான் கிறிஸ்துவுக்குள் இருந்தேன். நீங்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பே கிறிஸ்துவுக்குள் இருந்தீர்கள். அவர் தமக்குச் சொந்தமானவர்களை - அவருக்குள் இருந்த தமக்குச் சொந்தமானவர்களை - மீட்க வந்தார். அல்லேலூயா! அவருக்குள் இருந்த தமது பிள்ளைகளை... அவர் பிசாசின் பிள்ளைகளை இரட்சிக்க வரவில்லை. அவர்கள் அதை அறியவும் மாட்டார்கள். அவர்கள் தங்கள் அறிவுத்திறன் கொண்டு கற்ற கல்வியின் விளைவாக மிகவும் சாமர்த்தியமுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்களுடன் நீங்கள் எதையும் ஒப்பிட முடியாது. அவர்களிடம் நீங்கள் பேசி வெல்ல முடியாது. விசுவாசத்தின் மூலமாக மாத்திரமே நீங்கள் இதை காணமுடியும். 52விஞ்ஞானத்துக்கு விசுவாசம் அவசியமில்லை. அவர்கள் என்ன கூறுகின்றனரோ, அதை விஞ்ஞானம் நிரூபிக்கிறது. அதற்கு விசுவாசம் அவசியமில்லை. கத்தோலிக்க குருவானவர் உங்களிடம், “கத்தோலிக்க சபை எவ்வளவு காலமாக நிலைத்திருக்கிறதென்று பாருங்கள். அஞ்ஞானிகளின் துன்புறுத்தலையும் சகித்து எவ்வளவு காலமாக அது நிலைத்திருக்கிறதென்று பாருங்கள்” மெதோடிஸ்டு சபை, “பாருங்கள், எவ்வளவு காலம் என்கின்றது...” 53நான் ஒரு சபையைக் கண்டேன்... மாய்மாலான ஒரு அடையாளத்தை குறிப்பிட வேண்டுமென்றால், நேற்று நான் காலையில் வந்து கொண்டிருந்தபோது அதை கண்டேன். அது, “கிறிஸ்துவின் சபை, கி.பி. 33ல் நிறுவப்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது. அது நிறுவப்பட்டு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை - அந்த ஸ்தாபனம். நீதி. 3:5. ஓ, என்னே, அப்போஸ்தலர்களின் உபதேசம். அதில் ஒன்றும் கிடையாது. அவர்கள் இந்நாளின் சதுசேயர்கள். அவர்கள் மேல் தங்கியுள்ள ஆவி... அவர்களிடம் நீங்கள் ஒன்றையும் கூற முடியாது. ஒன்றையும் பேச முடியாது. அவர்களிடம் நீங்கள் ஒன்றையும் விவாதிக்க முடியாது. ஏனெனில் நாம் நமது புத்திக்கும் அப்பால் சென்றுவிடுகிறோம். “உன் சுயபுத்தியின் மேல் சாயாதே” (நீதி. 3:5). விசுவாசம் புத்தியைக் கொண்டு ஆலோசனை செய்வதில்லை. விசவாசம் அதை நம்புகிறது. அவர்கள் இங்கு பாருங்கள், அக்காலத்தில் செய்தவைகளை நாம் செய்ய வேண்டுமென்றா கூறுகிறீர்கள்? அர்த்தமற்றது என்கின்றனர். வேதம் அவ்வாறு கூறுகின்றது. அது எப்படி நடக்கிறதென்று என்னால் விளக்கம் கூற முடியாது. ஆனால் அது நடக்கிறது. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். எனவே நீங்கள்... அதைக் குறித்து நான் ஒன்றுமே கூறமுடியாது விசுவாசம் அதற்கு விளக்கம் தருவதில்லை. அது உங்களுக்குத் தெரியாதா? விசுவாசம் அதை அப்படியே நம்புகிறது. 54இயேசு அவருடைய காலத்திலிருந்த சபை ஆலோசனை சங்கத்தைச் சேர்ந்த நிக்கொதேமுவிடம்; அவன் இரவில் அவரிடம் வந்து, “ ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால், நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். இயேசு, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். நிக்கொதேமு, “ஒரு மனுஷன் முதிர் வயதாயிருக்கையில், எப்படி தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடும்?” என்றான். இயேசு, “உலக காரியங்களை நீங்கள் விசுவாசியாதிருக்கும்போது, பரலோக காரியங்களை நான் எப்படி உங்களிடம் சொல்லுவேன்?” என்றார். 55ஒரு நாள் அவர், “நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தை புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை” என்றார். அவர் அதற்கு விளக்கம் தரவில்லை. அக்காலத்திலே நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களையும் மற்றவர்களையும் அவர் அறிந்திருந்தார். அவர், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அவர் செய்ய வேண்டிய ஒரே காரியம். என் சத்தத்தை அறியப்படுத்துவதே. அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன” என்றார். சத்தம் என்பது உரைக்கப்படும் வார்த்தையாகும். பாருங்கள்?... அவர்கள் அதை எப்படியும் விசுவாசிப்பார்கள். அவர்கள் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியமோ அல்லது எந்த சதுசேயனையும் பரிசேயனையும் அதைக் குறித்து கேட்க வேண்டிய அவசியமோ கிடையாது. நான் ஒன்றைக் கூறினால், அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது. இது எழுத்து வடிவில் தேவனுடைய சத்தமாகும். ஏனெனில் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் ஒருமித்து இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்றதாய் அமைந்துள்ளது. ஆமென்! பார்த்தீர்களா? 56அவர்கள் நல்லவர்களென்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவர்களை அப்படி செய்வது எது? ஏனெனில், ஒரு காரியம். அவர்கள் கட்டப்படும் கம்பம் சபை. இங்கு... சென்ற வாரம் ஞாயிறன்று, உங்களுக்கு ஞாபகமுள்ளதா... எத்தனை பேர் இங்கு வந்திருந்து, “கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்,” என்னும் செய்தியைக் கேட்டீர்கள்? நீங்கள் அனைவருமே என்று நினைக்கிறேன். பாருங்கள், அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அவர்களுடைய ஆவிகள் இந்த இரண்டாம் கூட்டத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளன. 57முதலாம் பெண், “சபை கூறுகிறதை அந்த பெண் அசட்டை செய்கிறாள், யார் என்ன கூறினாலும் அவள் சாமர்த்தியமுள்ளவள். அவள் கல்லூரியில் கல்வி பயின்றவள். அவளுக்கு ஏதாவதொன்று நேர்ந்துவிட்டால், அதை தன் கணவனின் மேல் சாட்டிவிடலாம் என்று சாமர்த்தியமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்கிறாள். ஆனால் இந்த பெண்ணோ குருடாயும் நிர்வாணியாயும் இருந்து, அதை அறியாமலிருக்கிறாள். ஒ, அது பரிதாபமானது. ஆனால் அப்படிப்பட்ட சித்திரத்தை தான் வேதம் தீட்டுகிறது. அவள் சபைக்குச் செல்கிறாள். அந்த பெண், அதைக் காட்டிலும் பெண்கள்... அவள் சுத்தமான வாழ்க்கை வாழ்கிறாள். அதற்கு விரோதமாக ஒன்றுமில்லை. தேவன் அதை நியாயந்தீர்ப்பார். எனக்குத் தெரியாது, நான் நியாயாதிபதி அல்ல. அவர் எனக்கு எதை காண்பிக்கிறாரோ, அதற்கு மாத்திரம் நான் பொறுப்புள்ளவனாயிருக்கிறேன். “அப்போஸ்தலர்களும் அப்படித்தான் கூறினர். நாங்கள் அறிந்தவைகளையும், கேட்டவைகளையும், கண்டவைகளையும் பேசுகிறோம்” என்றனர். அதற்கு மாத்திரமே நான் பொறுப்புள்ளவன், அதற்கு மாத்திரமே நீங்கள் பொறுப்புள்ளவர்கள். 58இப்பொழுது பாருங்கள், அதே பெண்ணை நீங்கள் எடுத்துக் கொண்டால்... அவள் எங்கு முடிவடைந்தாள்? அவள் அநேக முறை வானொலியில் கேட்டிருப்பாள். தேவனுடைய சத்தம் அநேக முறை அவளிடம் பேசி வந்தது. பாருங்கள், அவள் இந்த கொள்கைக்குள் (cult), ஒரு குலத்திற்குள் (clan) பிரவேசித்து விடுகிறாள் - சபைகள் அனைத்தும் வெவ்வேறு குலங்களே. அது முற்றிலும் உண்மை. அவை விடுதிகள் மாத்திரமே. அங்கு ஜனங்கள் அங்கத்தினர்களாக ஒன்று கூடுகின்றனர். அவள் இங்கு வருகிறாள். அவளுக்கு அது நல்ல பொருத்தமாயுள்ளது. அவள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் அவளிடம் எடுத்துக் கூறினால், அவள் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டாள். நீங்கள் வேதத்திலிருந்து அதை எடுத்து காண்பித்தாலும் அவள் செவி கொடுக்கமாட்டாள். 59என் அருமை சகோதரனே, சகோதரியே, முடிப்பதற்கு முன்பு இன்னும் ஓரிரண்டு விளக்கங்கள். பாருங்கள், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். 60அந்த பெண்ணுக்கு ஏன் அதை காண முடியவில்லை? ஏன் அவள்? அவள் தன் கணவனுக்கு விரோதமாக விபச்சாரத்தில் ஈடுபடும் குற்றத்தைப் புரியவில்லை. அந்த விஷயத்தில் அவள் பாவ அறிக்கை செய்ய ஒன்றுமேயில்லை. அவள் பிறந்த நாளன்று எப்படி இருந்தாளோ, அப்படியே இப்பொழுதும் சுத்தமாயிருக்கிறாள். எந்த மனிதனும் அவளைத் தொட்டதில்லை. இந்த பெண்ணை நான் சபையுடன் உதாரணப்படுத்தி பேசுகிறேன். அவள் பிறந்த நாளன்று இருந்தது போலவே இப்பொழுதும் சுத்தமாயிருக்கிறாள். சபையும் அவ்வாறேயுள்ளது. அவள் பிறந்தபோது, அவள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாயிருக்கிறாள். நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா? தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது தவறென்று அவளிடம் கூறிப் பாருங்கள்! வேதம் அவ்வாறு கூறுகின்றது. குட்டை கால்சட்டை அணிவது தவறு. வேதம் அவ்வாறு கூறுகின்றது. ஆனால் அவளோ, “மூடத்தனம்” என்கிறாள். ஏன்? அவளுடைய முடிவு அந்த மூன்றாம் மனிதனில் - முன்குறிக்கப்பட்டு தேவனால் அனுப்பப்பட்ட அந்த ஆத்துமாவில் இல்லை. அதற்கு பதிலாக அவளுடைய ஒரு ஸ்தாபனத்தின் பேரில், ஏதோ ஒரு மனிதன் இதற்கு புறம்பே உண்டாக்கிய ஸ்தாபனத்தின் அடிப்படையில் உள்ளது. 61ஆனால் தேவனுடைய வார்த்தை மாத்திரம் அந்த ஆத்துமாவில் இருக்குமானால், “அது ஆமென்! அதை நான் காண்கிறேன்” என்று கூறும். அது தேவனுடைய வார்த்தையுடன் இணைந்திருக்கும். இங்கு பாருங்கள், எனவே தேவனுடைய ஆவியினால் பிறந்த எந்த மனிதனும்... பாருங்கள், வெளிப்புற சரீரம் இங்குள்ளது. நான் ஆண்களும் பெண்களும் கலந்த கூட்டத்தினர் மத்தியில் பேசுகிறேன். ஆனால் உங்கள் போதகர் என்ற முறையில், உங்கள் சகோதரன் என்னும் முறையில் பேசுகிறேன். இங்கு சரீரம் உள்ளது. அது பலவீனமானது. அது அப்படித்தான் இருக்கும். ஒரு பெண் தெருவில் நடந்து செல்கிறாள். ஒரு இளைஞன் 17,18,20,25,30 வயதுள்ளவன், அங்கு வருகிறான். இந்த பெண் தன் உடலை நெளித்துக் கொண்டு, உயரமான காலணிகளைப் போட்டுக் கொண்டு, முன்பாகமும், பின்பாகமும் உந்தித் தள்ளிக் கொண்டு வருவது போன்ற இறுக்கமான ஆடைகளை, அவள் முழங்கால்களுக்கு மேலேயுள்ள ஆடைகளை, அல்லது குட்டைகால் சட்டை அணிந்திருக்கிறாள். அவள் அப்படி நடந்து கொள்வாள் என்று வேதம் கூறுகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? அவள் அசுத்தமாய் இருப்பாளென்று வேதம் கூறுவது உங்களுக்குத் தெரியுமா? 62இந்த மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் படித்தீர்களா? மனிதரும் ஸ்திரீகளும் இப்படியாக... 20,25 வயதான பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடுகிறதாம். விஞ்ஞானத்தின்படி வாழ்க்கையில் ஏற்படும் இந்த மாற்றம் நடுத்தர வயதில் நிகழ வேண்டும். என் காலத்தில் அது 30 அல்லது 35 வயதில் உண்டானது. என் தாயாரின் காலத்தில், ஒரு ஸ்திரீக்கு 40 அல்லது 45 வயதாகும் வரைக்கும் மாதவிடாய் நிற்பதில்லை. அதன் காரணம் என்ன? விஞ்ஞானத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கலப்படமான உணவு மானிட சரீரத்தையே குலைத்துவிட்டது... நாம் அழிந்து போய்க் கொண்டிருக்கிறவர்களாகிவிட்டோம். மானிட உடல் நிலை குலைந்து காணப்பட்டால், அதிலுள்ள மூளை அணுக்களும் அந்நிலையில் தான் இருக்குமல்லவா? 63இப்பொழுது, ஆவி இதை ஆமோதிப்பதை பாருங்கள், கர்த்தரின் நாமத்தினால், ஒரு நேரம் வரப்போகிறது. அப்பொழுது ஜனங்கள் முழுவதும் பைத்தியம் பிடித்தவர்களாய் ஆகிவிடுவார்கள். வேதம் அவ்வாறு கூறுகின்றது. அவர்கள் பயத்தில் கூக்குரலிட்டு அலறுவார்கள்; தங்கள் மனதில் பெரிய பயங்கரமானவைகளை கற்பனை செய்து கொண்டு. வானொலிகளும் தொலைகாட்சிகளும் அத்தகைய பயங்கரமான காட்சிகளை காண்பிக்கின்றன. 14 மரங்கள் உயரமுள்ள எறும்புகள் இப்பூமியில் தோன்றும். 4 அல்லது 5 மைல்கள் நீளமுள்ள சிறகுகள் கொண்ட பறவை பூமியில் பறந்து செல்லும். ஜனங்கள் அதைக் காண்பார்கள். அவர்கள் இரக்கத்துக்காக கதறி கூச்சலிட்டு அலறுவார்கள். அது வாதையாயிருக்கும். வாதைகள் உண்டாவதைக் குறித்து நான் பிரசங்கிக்கும் வரைக்கும் காத்திருங்கள். 64மோசே என்ன செய்தானென்று பாருங்கள், மனிதனாக, ஆவியாக அல்ல. அவர், “மோசே...” என்றார். தேவன் மோசேயிடம், “அங்கு போ” என்றார் (அவருடைய தீர்க்கதரிசியிடம்), “கை நிறைய புழுதி எடுத்துக் கொண்டு அதை ஆகாயத்தில் எறிந்து, 'கர்த்தர் உரைக்கிறதாவது', பூமியில் வண்டுகள் தோன்றும்” என்று சொல் என்றார். அப்பொழுது ஒரு வண்டும் இல்லை. முதலாவதாக ஏதோ ஒன்று புதரில் மெல்ல நகர்வதைக் கண்டனர். பிறகு பார்த்தபோது, வேறு சில வண்டுகள் தோன்றின. சிறிது கழிந்து அவை மிக அதிகமாகப் பரவி, அதன் வழியாக நடக்கவே முடியவில்லை. அவை எங்கிருந்து வந்தன? தேவன் சிருஷ்டிகர்த்தர்! அவருக்கு சித்தமானதை அவர் செய்ய முடியும் அவர் இராஜாதிபத்தியம் உள்ளவர். அவர் பூமியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் சிறகுகளைக் கொண்ட ஒரு பறவையை சிருஷ்டிக்க முடியும். அவன், “ஈக்கள் உண்டாகக்கடவது” என்றான். அவை மிக அதிகமாகப் பெருகி, பூமி முழுவதையும் கம்பளம் போல மூடினது. தேசத்தில் ஒரு ஈ கூட இல்லை. முதலில் ஒரு மாட்டு ஈ சுற்றிலும் பறந்து வந்தது. பிறகு 8,10,12, ஈக்கள் தோன்றின. அதன் பிறகு அதன் வழியாக யாரும் நடந்து செல்ல இயலவில்லை. சிருஷ்டி கர்த்தராகிய தேவன் தமது வார்த்தையை காத்துக் கொள்கிறார். 65தேவனுடைய கட்டளைக்கு இணங்கி மோசே தன் கோலை நீட்டி தவளைகள் உண்டாகி பூமியை நிரப்பக் கடவது என்றான். தவளைகள் உண்டாகி, அவர்கள் அவைகளைக் குவியல் குவியலாகக் குவித்தனர். எங்கும் துர்நாற்றம் - ஒருக்கால் 40 அல்லது 50 அடிக்கு தவளை குவியல். அவை பார்வோனின் பாத்திர அலமாரிக்குள் நுழைந்தன. அவை... போர்வையைத் திருப்பினால் அதனடியில் 500 தவளைகள். அவை படுக்கைகளிலும். மிதியடிகளிலும் இருந்தன. எங்கு பார்த்தாலும் தவளைகள், தவளைகள், தவளைகள். அவை எங்கிருந்து வந்தன? சிருஷ்டி கர்த்தராகிய தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர்! அவர் என்ன உரைத்தாரோ, அதை நிறைவேற்றுவார். அவர் பயங்கரமான காட்சிகள் பூமியில் தோன்றுமென்று உரைத்தார். ஸ்திரீகள் கூந்தலைப் போன்ற கூந்தல் கொண்ட வெட்டுக்கிளிகள் (வெளி. 9:7) - கூந்தலைக் கத்தரிக்கும் ஸ்திரீகளைப் பிடிப்பதற்காக நீண்ட கூந்தல், சிங்கங்களின் பற்களைப் போன்ற பற்கள், தேள்களின் கொடுக்குள் போன்ற கொடுக்குகளைக் கொண்ட வால்கள். அவைகள் அநேக மாதங்கள் மனிதரை வேதனைப்படுத்தும். வாதைகளையும், முத்திரைகளையும், ஏழு இடி முழக்கங்களையும் திறக்க நமக்கு நேரம் வரும் வரைக்கும் காத்திருங்கள்! என்ன நடக்கப் போகிறதென்று பாருங்கள். ஓ, சகோதரனே, நேரமுள்ள போதே நீ கோசேனுக்கு போய்விடுவது நல்லது. இந்த வெளிப்புறத்துக்கு எந்த கவனத்தையும் செலுத்தாதே. 66இங்கு பாருங்கள், இங்கு ஒரு பெண் தன் உடலை நெளித்துக் கொண்டு தெருவில் செல்கிறாள். இங்கு ஒரு வாலிபன் இருக்கிறான். அவனுடைய கண்கள் அவளை நோக்குகிறது. அவன் ஒரு சபையில் அங்கத்தினன், ஒரு பெந்தெகொஸ்தேயினன், அப்படி ஏதோ ஒன்று. அவள், “ஹல்லோ” என்கிறாள். அவனுக்கு சுருண்ட தலைமயிர் உள்ளது, அவன் காண்பதற்கு அழகுள்ளவன், தோள் நேராயுள்ள இளைஞன், அவன் ஒருக்கால் நேர்மையாக நடக்க முயன்றிருப்பான். அவள் அவனிடம் நடந்து செல்கிறாள் - அவன் ஒருக்கால் பிரசங்கியாகவும் கூட இருக்கலாம். முதலாவதாக என்ன தெரியுமா... அது என்ன? இந்த வெளிப்புறம், மாம்ச இச்சை, அதற்குள் இருக்கிற ஆவி அபிஷேகம் பண்ணப்பட்டு, “அதை செய்யாதே, அதை செய்யாதே” என்கிறது. அது என்ன செய்கிறது? அது சுற்றி சுற்றி வரும் - அவன் அங்கு செல்கிறான். முதலாவதாக என்ன தெரியுமா, அவன் அவளுடன் வெளியே செல்ல ஒரு நாளைக் குறித்து சொல்கிறான். அவன் அவளைத் தொட்டாலும் தொடாவிட்டாலும், அவன் விபச்சாரம் செய்த குற்றத்துக்கு ஆளாகிறான். 67ஆனால், உண்மையில் மறுபடியும் பிறந்த தேவனுடைய குமாரன்... ஆமென்! அதை நீங்களாகவே செய்ய முடியாது. இளமை ரத்தம் உடலில் ஓடும் ஒரு ஆண்மகன் அப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் செல்லும்போது, ஏதாவதொன்று நடக்காமல் இருக்காது. ஏதாவதொன்று உள்ளே இருக்கும்போது, அங்குள்ள மறுபடியும் பிறந்த அது, அந்த மனிதன் உரக்க சத்தமிட்டிருக்கலாம். அந்திய பாஷை பேசியிருக்கலாம், குதித்து, நடனமாடி எல்லாவற்றையும் செய்திருக்கலாம். ஆவியினால் அபிஷேகம் பெற்று, இங்கு தேவன் கூறியுள்ள எல்லா அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்திருக்கலாம். அவருடைய ஆவியினால்... இயேசு, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, 'கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா?' என்பார்கள்” என்றார். அவரோ, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்பார். அக்கிரமம் என்றால் என்ன? ஒன்றை நீங்கள் செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாமலிருப்பது. “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்.” ஆனால் அந்த மனிதனின் உள்ளில்... உலகத் தோற்றத்துக்கு முன்னால் முன் குறிக்கப்பட்ட தேவனுடைய வித்து - அந்த சிறு கட்டப்படும் கம்பம் - இருக்குமானால், என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது அங்கு நிலைத்திருக்கிறது. 68அது இல்லாத காரணத்தால் தான் அந்த பெண் குட்டை கால்சட்டை அணிகிறாள். வேசித் தொழிலில் ஈடுபட்டுள்ள வேசியைப் போலவே இவளும் வேசியாக கருதப்படுகிறாள். அது ஒரு ஆவி என்பதை அவள் அறியாமலிருக்கிறாள்... அவள் முடிவை எப்படி அறிந்து கொள்ளுகிறாள்? முடிவு என்றால் என்ன? அதுதான் அதைக் குறித்து கூறப்படும் கடைசி வார்த்தைகள். முடிவு என்பது ஆமென், அது எல்லா போராட்டத்துக்கும் முடிவு - உங்களுடைய முடிவு. நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்திருந்து, நீண்ட கூந்தல் வைத்துக் கொள்ள வேண்டுமென்பது மூட நம்பிக்கையென்று அது உங்களிடம் கூறுமானால் - “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது” என்றெல்லாம் கூறுமானால், அப்படிக் கூறும் மனிதனுக்கு பிசாசு பிடித்துள்ளது. ஏனெனில் தேவனுடைய வார்த்தை, “ஸ்திரீயானவள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கிறது அவளுக்கு வெட்கமாயிருக்கும். அவள் தன் தலையை கனவீனப்படுத்துகிறாள் என்று கூறியுள்ளது. அதன் மூலம் அவள் தன் புருஷனை கனவீனப்படுத்துகிறாள், அவளுடைய புருஷன் சபை, சபை கிறிஸ்து. அவள் கனவீனமான மத சம்பந்தமான வேசி - நிர்வாணியாயிருந்து அதை அவள் அறியாமலிருக்கிறாள். நிர்வாணி. ஒரு ஸ்திரீயின் முக்காடு அவளுடைய தலைமயிர் என்று வேதம் கூறவில்லையா? அவளுக்கு தலைமயிர் தான் முக்காடாக கொடுக்கப்பட்டுள்ளது அல்லவா? 69ஒரு நாள் அப்பாலுள்ள நியாயஸ்தலத்தில்... நான் மருந்தை வாயில் ஊற்றி அதை துப்பிவிடாமலிருக்க உங்கள் வாயை என் கைகளால் பொத்திக் கொண்டிருக்கிறேன். நீங்களோ உங்கள் விரல்களின் வழியாக அதை வெளியே துப்பிவிடுகிறீர்கள். அப்படிப்பட்டவர்களை தேவன் ஒரு நாள் நியாயந்தீர்ப்பார். அது “கர்த்தர் உரைக்கிறதாவது”, அது மூடத்தனமோ அல்லது பைத்தியக்காரக் கிழவன் உணர்ச்சிவசப்பட்டு கூறும் ஒன்றோ அல்ல. அது அப்படியொன்றும் அல்ல, அது கர்த்தருடைய வார்த்தை. உண்மையான கிறிஸ்தவன் எவனும் அந்த உள்ளான மனிதனுடன் ஒத்துப் போவான் - ஆதியிலிருந்த அந்த ஆவியுடன், அது தான் வார்த்தை! அவர் உங்கள் எல்லோராலும் நிறைந்திருந்தார். கல்வாரியில் நீங்கள் அவருக்குள் இருந்தீர்கள். நீங்கள் இங்கிருப்பீர்கள் என்று அவர் முன்னறிந்தார். என்ன நடக்குமென்பதை மாத்திரம் அவர் அறிவித்துள்ளார். நீங்கள் அவருக்குள் இருந்தீர்கள். நீங்கள் அவருக்குள் மரித்தீர்கள். நீங்கள் உங்கள் பெருமைக்கு, உங்கள் இச்சைக்கு மரித்தீர்கள். நீங்கள் உலகத்துக்கு மரித்தீர்கள்! நீங்கள் அவருடன் கல்வாரியில் மரித்து, அவர் மூன்றாம் நாள் உயிரோடெழுந்த போது, அவருடன் நீங்களும் உயிரோடெழுந்தீர்கள். அவரை நீங்கள் ஏற்றுக் கொண்ட காரணத்தால், இப்பொழுது உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அல்லேலூயா! 70பார்த்தீர்களா? அது உள்ளான மனிதன். உள்ளிலுள்ள அது வார்த்தையை ஆமோதிக்கும். என்ன நடந்தாலும் வார்த்தையை இறுகப்பற்றிக் கொள்ளும். நீங்கள் அப்படி செய்யாமலிருக்க முடியாது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு இதை நான் கற்றுக் கொண்டேன். என் குழந்தை அங்கு மரணத்தருவாயில் கிடந்திருந்தது. என் மனைவி மரித்து போய், தைலமிட்டு, சவக்கிடங்கில் கிடத்தப்பட்டிருந்தாள். அவர்கள் என்னை அங்கு அழைத்தார்கள் ஷாரோன் மரணத்தருவாயில் இருந்தாள். என் வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த மிகக் கடினமான சோதனை அது. எனக்கு அப்பொழுது 25 வயது. நான் அங்கு சென்றேன், பில்லிபாலும் மரணத்தருவாயிலிருந்தான். டாக்டர் சாம் என்னிடம், “பில், பில்லியை காப்பாற்ற முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. அவன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறான். உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று சொல்லி தன் கரங்களை என் தோளின் மேல் போட்டார். நான், “டாக்டர், இதைத் தாங்கிக் கொள்ள எனக்கு பெலன் இல்லை, இரண்டு மணி நேரமாக என் குழந்தை ஷரோனுக்காக ஜெபித்துவிட்டு, அவளை இங்கு கொண்டு வந்தேன்... அவளுக்கு வலிப்பு உண்டாகுவதைக் காண்கிறேன். அவர்கள் அவளுடைய முதுகெலும்பில் - ஊசியை ஏற்றினார்கள். அதை துளையிட்டார்கள். பிறகு அது க்ஷயரோகத்தினால் மூளையையும் முதுகெலும்பையும் பாதித்த வியாதி (tubercular meningitis) என்று கூறிவிட்டனர்” என்றேன். 71நான் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, என் பழைய மோட்டார் வாகனத்தை நிறுத்திவிட்டு, அறையை நோக்கி நடந்து சென்றேன். சாம் கையில் தொப்பியைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே முன்னறைக்கு வந்து, அவருடைய கரத்தை என் தோளின் மேல் போட்டு, “பில், திரும்பி வந்துவிடும்” என்றார். “என்ன விஷயம்?” என்றேன். அவர், “பில், உங்கள் குழந்தையை நீங்கள் பார்க்கமுடியாது. அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். நான், “சாம், என் குழந்தையா?” என்றேன். அவர், “ஆம்”. அவள் உயிருக்காக கெஞ்ச வேண்டாம். அவள் உயிரோடிருக்க நேரிட்டாலும், வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றிருப்பாள். அவளுக்கு மூளை வியாதி ஏற்பட்டுள்ளது. அவள் அருகில் செல்ல வேண்டாம். அப்படி செய்தால் நீங்கள் பில்லியையும் கொன்று விடுவீர்கள் என்றார். நான், சாம், அவளை நான் எப்படியாவது பார்க்க வேண்டும் என்றேன். அவர், “பில், நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நீங்கள் போகக் கூடாதென்று கட்டளையிடுகிறேன்”, “உங்களைக் குறித்து நான் எவ்வளவு மேன்மையாக நினைத்திருக்கிறேன்” தெரியுமா? நீங்கள் என் நெருங்கிய நண்பர், உங்களைக் குறித்து நான் மேன்மையாக நினைத்திருக்கிறேன் பில், உங்கள் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு. அந்த குழந்தையிடம் செல்லாதீர்கள். அவள் முளை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் மரித்துப்போவாள். நாம் அவளை அடக்கம் செய்துவிடுவோம். பில், “உங்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று கூறிவிட்டு,” 72நர்ஸை அழைந்து எனக்கு சில மருந்துகளைக் கொடுத்தார். “இந்த மனிதன் எப்படித்தான் தாங்கிக் கொள்கிறாரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். நான் சிறிது அங்கு நின்றேன். அவர் மருந்தைக் கொண்டு வந்தார். நான் முன்னறையில் இருந்தேன். அவர், “உட்காருங்கள்” என்றார். நர்ஸ் என்னிடம், “சகோ. பிரான்ஹாம், இதை நீங்கள் குடிக்க வேண்டும்” என்றாள். நான், “நன்றி, அதை ஒரு நிமிடம் அங்கு வைத்துவிடு” என்றேன். அவள் சென்றவுடனே நான் மருந்தை எச்சில் துப்பும் பாத்திரத்தில் கொட்டிவிட்டு, காலி கண்ணாடி பாத்திரத்தை மேசையின் மேல் வைத்துவிட்டேன். நான், “ஓ, தேவனே, நான் என்ன செய்தேன்? நீர் நல்ல தேவன், பின்னை ஏன் அவள் மரிக்க அனுமதித்தீர்? நான் ஏன் அவளுடைய இரு சிறு கரங்களையும் இப்படி பிடித்துக் கொண்டு, உம்மிடம் அவளுக்காக கெஞ்சும்படி செய்தீர்? அவளை ஏன் மரிக்கவிட்டீர்? பில்லி அங்கு மரணத்தருவாயில் இருக்கிறான். இங்கு இவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்! நான் என்ன தீங்கு செய்தேன்? எனக்கு சொல்லும்! நானும் அவர்களுடன் மரித்தால் நலமாயிருக்கும் என்றேன். நான் கதவைத் திறந்த போது. நர்ஸ் யாரும் அங்கில்லை. நான் மெல்ல நழுவி கீழ் தளத்துக்கு சென்றேன். அது ஆஸ்பத்திரி கட்டி முடிப்பதற்கு முன்பு அங்கு ஜன்னல்களில் திரைகள் எதுவுமில்லை. அவளுடைய சிறு கண்கள் மேல் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. ஒரு துண்டு கொசுவலை இருந்தது. அதை அவள் முகத்தின் மேல் போட்டேன். நான் ஈக்களை ஓட்டிவிட்டு, அங்கு படுத்தேன். அவள் அதிக வேதனை அனுபவித்த காரணத்தால் அவளுடைய சிறு கண்கள் குறுக்காக சென்றன. 73அப்பொழுது சாத்தான் என் பக்கத்தில் வந்து, “அவர் நல்ல தேவன் என்றா கூறினாய்?” என்றான். நான், “ஆம், அப்படித்தான் கூறினேன்” என்றேன். “அவர் சுகமளிப்பவர் என்றா கூறினாய்? பின்னை ஏன் உன் தந்தை அவருடைய உயிருக்காக நீ கெஞ்சின போதிலும், உன் கரங்களில் மரித்துப் போனார்? அவரை நீ பாவியென்று அழைத்தாய். சில வாரங்களுக்கு முன்பு நீ பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, உன் சகோதரன் மற்ற சகோதரனின் கரங்களில் ஏன் மரித்துப் போக வேண்டும்?” அவர் ஏன் உன் ஜெபத்துக்கு பதிலளிக்கவில்லை?, “அவர் உன்னை நேசிக்கிறார் என்றும் உன்னை இரட்சித்தார் என்றும் கூறினாயே” என்றான். தேவன் இல்லையென்று நீங்கள் என்னிடம் கூற முடியாது. ஏனெனில் அவரை நான் ஏற்கனவே கண்டிருக்கிறேன். எனவே சாத்தான், அவர் எனக்காக கவலை கொள்ளவில்லை என்று மாத்திரம் கூறினான். அவன், “அங்கு உன் மனைவி மரித்து படுத்துக்கிடக்கிறாள். உன் குழந்தைகளும் விரைவில் அங்கு சென்றுவிடு! உன் தந்தை அடக்கம் பண்ணப்பட்டுவிட்டார். உன் சகோதரனையும் அடக்கம் பண்ணியாகிவிட்டது. நாளை உன் மனைவி அடக்கம் பண்ணப்படுவாள். உன் மற்றொரு குழந்தை இங்கு மரித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அவர் நல்ல தேவன், அவர் சுகமளிப்பவர்” என்கிறாய். “உன் சக்தி எல்லாம் போக்கிக் கொண்டாயே”. 74அதனால் என்ன உபயோகம்? என்றான். அது வெளிப்புறத்திலிருந்து முதலாம் மனிதனில் கிரியை செய்து கொண்டிருந்தது. அவன், “பார், உனக்குத் தெரியுமா, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதை நீ ஏற்றுக் கொள்வதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜனங்களிடையே நீ மேன்மையாக கருதப்பட்டாய். நீ சுத்தமான நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தாய். எந்த பெண்ணும் உன்னுடன் செல்ல விருப்பங் கொண்டாள். ஏனெனில் உன் தொடர்பில் அவர்கள் சுத்தமாயும் நாணயமாகவும் இருக்கலாமென்று அறிந்திருந்தனர் என்றான்”. அவ்விஷயத்தில் அவர்கள் முன்னிலையில் நான் தைரியமாக நிற்க முடியும். அவர்கள் யாரையும் நான் அவதூறாகப் பேசினதில்லை. நான் அப்படிப்பட்ட ஒன்றையும் கூறினதில்லை. எந்த பெண்ணாவது கர்வமாக நடந்து கொண்டால், அவளைக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிடுவேன். சாத்தான், “ஜனங்கள் உன்னை அதிகமாக விரும்பினார்களே, இப்பொழுது எந்நிலையில் இருக்கிறாய்? மனிதாபிமானம் கொண்ட மூட வைராக்கியமுள்ளவனாயிருக்கிறாய் என்றான்”. சாத்தான் கூறியது உண்மையே. நான் ஜனங்களால் ஒரு காலத்தில் விரும்பப்பட்டவன். பாருங்கள், இவையனைத்தும் நகர்ந்து ஒன்று சேருகிறது. வெளிப்புறத்திலுள்ள சிந்திக்கும் தன்மையும் ஆவியும் இவைகளை ஒன்றாக இணைக்கின்றன. “சாத்தானே அது உண்மை”. “அவர் சுகமளிப்பவர் என்றா கூறினாய்?” “ஆம், ஆம்” நீ கூச்சலிட்டு, “அவர் சுகமளிப்பவர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஜனங்களிடம் மன்றாடினாய். நீ வழி தவறிவிட்டாய் என்றும் அது உண்மையல்ல என்றும் அவர்கள் உன்னிடம் கூறினார்கள். இந்த காரணத்துக்காக உன் சொந்த ஜனங்களே உன்னைத் துரத்திவிட்டார்கள். அங்குள்ள உன் சொந்த பாப்டிஸ்டு சபையே உன்னை இந்த காரணத்துக்காக வெளியே துரத்திவிட்டது” “ஆம்” “உன் தந்தையை அடக்கம் செய்தாயிற்று. உன் சகோதரனை அடக்கம் செய்தாயிற்று. உன் மனைவி மரித்து கிடக்கிறாள். அவளை அடக்கம் செய்ய வேண்டும். இங்குள்ள உன் குழந்தை இன்னும் 15 நிமிடங்களில் மரித்து போவாள். அப்படியிருந்தும் அவர் சுகமளிப்பவர் என்கிறாயா?” உனக்கு நெருங்கின மாமிச இரத்த சம்பந்தமான குழந்தை, “அவர் ஒரு வார்த்தை கூறினால் உன் குழந்தையின் உயிர் காக்கப்படும். அவர் சுகமளிப்பவர் என்றாயே. அப்படியல்ல என்று ஜனங்கள் உன்னிடம் கூற முயன்றார்கள். நீ குழப்பமுற்றிருக்கிறாய் என்றும் உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதென்றும் போதகர்கள் உன்னிடம் கூற முயன்றார்கள். நீ மூட வைராக்கியம் கொண்ட மனிதாபிமானமுள்ளவன். அவர் உன்னை நேசிக்கிறார் என்று நீ கூறிக்கொள்கிறாய். அவர் என்ன உன்னை நேசிக்கிறாரா?” 75“நீ எவ்வளவாக உன் தந்தைக்காக கதறி அழுதாய்! எத்தனையோ இரவுகள் நீ உபவாசித்ததன் விளைவாக, காலையில் சிலைக்கு செல்ல தடி ஊன்றி செல்லும் நிலைமை ஏற்பட்டது. எனினும் அவர் பாவியாகவே உன் கரங்களில் மரித்து போக தேவன் அனுமதித்துவிட்டார். உன் மனைவி எவ்வளவு அருமையானவள்” (பில்லியின் தாய் - உங்களில் அநேகருக்கு ஹோப்பை நினைவிருக்கும்), “அவள் எவ்வளவு அருமையான பெண். 7 அல்லது 8 டாலர்கள் மதிப்புள்ள மரச் சாமான்களை வைத்துக் கொண்டு நீங்கள் இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள்? உங்களுக்கு சொற்ப மரச் சாமான்கள் இருந்த போதிலும், நீ அவளை நேசித்தாய். நீங்கள் ஒருவரையொருவர் நேசித்தீர்கள். நீ மற்றவர்களுக்காக சென்று ஜெபித்தாய். அது ஏதோ மனதில் ஏற்பட்ட ஒரு விதமான உணர்ச்சி அவர்கள் எழுந்து நடந்து சுகம் பெற்றுவிட்டதாக அறிவித்தனர். ஆனால் இப்பொழுது உன் சொந்த மனைவி... அதோ அவள் மரித்து கிடக்கிறாள். அவர் மரித்து இது இரண்டாம் நாள். அவள் ஸ்காட் அண்டு கோம்ப்ஸ் என்னும் சவ அடக்க நிர்வாகத்தினரின் சவக்கிடங்கில் இருக்கிறாள். இவரா சுகமளிப்பவர்? உன் சிறு பையன் பில்லி பால் மரணத்தருவாயில் இருக்கிறான். அவனுக்கு பதினெட்டு மாதம், 8 மாதம் வயதான உன் சிறு பெண் மூளை வியாதியினால் மரித்துக் கொண்டிருக்கிறாள். நீ அவளுக்காக ஜெபித்தாய். தேவன் திரையை இழுத்து மறைத்துக் கொண்டு, ”வாயை மூடு, நீ கூறுவதை கேட்க எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி உன் பக்கம் முதுகை திருப்பிக் கொண்டார். இவரா நல்ல தேவன்? இவரா உன்னை நேசிப்பவர்? நீ கூட சென்ற ஒவ்வொரு பெண்ணும், நீ தொடர்பு கொண்ட ஒவ்வொரு பையனும், உன் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே, நீ முட வைராக்கியம் கொண்ட மனிதாபிமானி என்னும் காரணத்தால் உன்னை விட்டு விலகி சென்றுவிட்டனர்“. 76என்னிடம் சாத்தான் கூறின அனைத்தும் உண்மையே. அவன் கூறின அனைத்துமே மிகவும் சரியாகத் தென்பட்டது. பாருங்கள், இங்கே? “அவர் இப்படித்தான் நடந்து கொள்வாரானால், அவரை இனிமேல் நான் சேவிக்கமாட்டேன்” என்று கூற வாயெடுத்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று எங்கிருந்தோ வந்தது. அப்பொழுது என் உள்ளிலிருந்து ஒன்று, “முதலாவதாக, நீ எம்மாத்திரம்? கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் என்றது.” பாருங்கள், அது தான் உள்ளான மனிதன். எதையுமே சிந்தித்து பார்க்காதீர்கள். அப்பொழுது நான், “இவ்வுலகில் நான் எப்படி வந்தேன்? நான் குடிகார குடும்பத்தில் பிறந்தவன். இந்நிலைக்கு நான் எப்படி வந்தேன்? எனக்கு ஜீவனைக் கொடுத்தது யார்? அந்த மனைவியை எனக்கு கொடுத்தது யார்? அந்த குழந்தையை எனக்கு கொடுத்தது யார்? என் மனைவி எங்கிருந்து வந்தாள்? என் ஜீவன் எங்கிருந்து வந்தது?” என்றெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அப்பொழுது நான், “அவர் என்னைக் கொன்று போட்டாலும். அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன், அப்பாலே போ, சாத்தானே” என்றேன். 77என் கையை நான் குழந்தையின் மேல் வைத்து. ஷாரோன், தேனே, இன்னும் சில நிமிடங்களில் உன்னை உன் தாயின் கரங்களில் கிடத்துவேன். அப்பொழுது தேவ தூதர்கள் வந்து உன்னைக் கொண்டு செல்வார்கள். ஒரு நாள் அப்பா உன்னை மறுபடியும் காண்பேன். தேனே, அது எப்படி இருக்கப் போகிறதென்று எனக்குத் தெரியாது. என்னால் சொல்ல முடியாது. உனக்காக நான் ஏறெடுத்த ஜெபத்தை அவர் கேளாமல் முதுகைத் திருப்பிக் கொண்டார். என் மனைவி மரிக்கும்படி செய்தார். அவள் கரங்களை நான் பிடித்துக் கொண்டு அவளுக்காக அழுதேன். என் தந்தையும் இங்குள்ள இதே கரங்களில் மரித்து போனார். அவர் மூச்சுத் திணறி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். என்னால் முடிந்த வரைக்கும் அவருக்காக ஊக்கமாக ஜெபித்தேன் என்றேன். நான் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்து விட்டு, மறுபடியும் எப்படி பொது ஜனங்களின் முகத்தை நோக்குவேன்? என் தந்தையை பாவியாக மரிக்கவிட்டு, நான் எப்படி அவர் நல்ல தேவன் என்று பிரசங்கிப்பேன்? எப்படியென்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் சரியென்று உணர்ந்தேன். 78தேவனுடைய வார்த்தை ஒருக்காலும் தவறாது. என்ன நேர்ந்தாலும், அது வெற்றியடையும். பிறகு இவையனைத்துக்கும் உள்ளில் ஏதோ ஒன்றுண்டு என்பதை அறிந்து கொண்டேன் - எல்லா உணர்ச்சிகளுக்கும், அப்படிப்பட்ட மற்றெல்லாவற்றுக்கும் உள்ளில், உள்ளான மனிதன் ஒன்றிருந்தது. அது தான் அந்நேரத்தில் நிலைநின்றது. வேறொன்றும் அப்படி செய்திருக்க முடியாது. ஒவ்வொரு விவேகமும், அவை காண்பித்தவையும் தவறென்று அது நிரூபித்தது. நானும் தவறாயிருந்தேன். ஆனால் உலகத் தோற்றத்துக்கு முன்பு முன் குறிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை உள்ளேயிருந்து கொண்டு நிலை நிற்கச் செய்தது. கட்டிடத்தின் வழியாக சிறு காற்று வருவதை உணர்ந்தேன். அவளுடைய ஆவி தேவனைச் சந்திக்க சென்றுவிட்டது. 79சகோதரனே, சகோதரியே அது ஒன்று மாத்திரமே என்று உங்களிடம் கூற விரும்புகிறேன். அதை சுயபுத்தியில் சிந்தித்து பார்க்க முயல வேண்டாம். நான் கூறினதால் நீண்ட தலை மயிரை வைத்துக் கொள்ள வேண்டாம்... நான் கூறினதை அனுசரித்து இவைகளைச் செய்ய முயல வேண்டாம். உங்களுடைய உள்ளில் ஏதோ ஒன்று உண்டாகும் வரைக்கும் கர்த்தருடைய சமுகத்தில் காத்திருங்கள்... நீங்கள் நீண்ட கூந்தல் வைத்துள்ள காரணத்தால் பரலோகத்துக்கு சென்றுவிடுவீர்கள் என்று உங்களில் அநேகர் நினைக்கின்றீர்கள். அது ஒருக்காலும் அப்படியில்லை. நீங்கள் நன்னடத்தையுள்ள பெண்கள் என்னும் காரணத்தால் பரலோகத்துக்கு சென்றுவிடுவதாக உங்களில் அநேகர் எண்ணுகின்றீர்கள். அது ஒருக்காலும் அப்படியல்ல. 80அவர்களுடைய சபைகள் இந்த பெரிய ஸ்தாபனத்தைச் சார்ந்து, வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெரியவர்கள் அவர்களுக்கு இருப்பதால், அநேகர் எண்ணுகின்றனர். அது அப்படியல்ல, பாருங்கள்? அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுவதால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக அநேகர் எண்ணுகின்றனர். பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகள் பேசுகிறது என்றாலும் அது அப்படி இருக்க வேண்டும் என்பதல்ல. அங்கு உண்மையான பரிசுத்த ஆவி இருக்குமானால், அது ஒவ்வொரு வார்த்தையையும் ஆமோதிக்கும். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி அந்திய பாஷைகள் பேசிவிட்டு, வார்த்தையுடன் இணங்காமற் போனால், அது தவறான ஆவி, அது உள்ளிலிருந்து வர வேண்டும். அது ஆதியிலிருந்த வார்த்தை. ஆதியிலே தேவன் சிருஷ்டித்த போது, உங்களையும் சிருஷ்டித்தார். பாருங்கள், “அப்பொழுது நீங்கள் வித்தாக தொடங்கி, இப்பொழுது இங்குள்ள நிலைக்கு வந்திருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தீர்கள். கிறிஸ்து மரித்தபோது; உங்களெல்லாரையும் மீட்பதற்காக அவர் மரித்தார். நீங்கள் இந்த வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கின்றீர்கள். அப்படியிருக்க, வேதாகமம் எப்படி - அது அனைத்தும் கற்பனையின் மேல் கற்பனையும், வரிசையின் மேல் வரிசையும், இங்கு கொஞ்சமும் அங்கு கொஞ்சமும்” வேதத்திலுள்ள ஒரு எழுத்தின் உறுப்பும் அவமாய்ப் போவதில்லை. நீங்கள் அந்த வார்த்தையின் ஒரு பாகமாய் இருந்தால், எப்படி வார்த்தையுடன் அல்லது அதன் ஒரு பாகத்துடன் இணங்காமலிருக்க முடியும்? 81தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் நேரத்தைக் காட்டிலும் நான் அதிகம் எடுத்துக் கொண்டேன் அப்படி செய்ய நினைக்கவில்லை; உங்களை நீண்ட நேரம் வைத்துக் கொள்ள. உங்களை இவ்வளவு நேரம் வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன், நான் உங்களிடம் கூறின விஷயத்திற்கு வருந்தவில்லை. நண்பர்களே, நாம் ஏதோ ஒன்றின் முடிவுக்கு வந்திருக்கிறோம். இங்குள்ள அனைவரும் இந்த சபையின் அங்கத்தினர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எதன் அங்கத்தினர்கள் என்று அறிந்து கொள்ள, நான் நேரத்தோடு வருவதில்லை. நீங்கள் அனைவரும் தொடர்ச்சியாக இங்கு வருபவர்கள் என்று நினைக்கிறேன். நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களிடம் கூற விரும்புகிறேன். எனக்கு இன்னும் 6 நிமிடங்கள் அவகாசம் கொடுப்பீர்களா? 82நான் இங்கு வந்த ஞாயிறன்று இங்கிருந்த ஆரிகானைச் சேர்ந்து சங்கை ஆர்லாண்டு வாக்கரா இவர்? இந்த பெரிய, வினோதமான காரியம் யாருக்காகிலும் தெரியுமா? நான் இங்கு வந்திருந்தபோது, அநேகர் இங்கிருந்தனர். எனக்கு நிறைய பேட்டிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் உபயோகமானவை - விவாகமான பிள்ளைகள், குடிகாரர்கள், வெவ்வேறு விஷயங்கள், உபயோகமானவை. அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அது என்னால் கூடாது. உங்களை தேவனிடம் சமர்ப்பித்து, என் கரங்களையுயர்த்தி உங்களுக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன். ஓ, தேவனே, என்னால் அதை செய்ய முடியவில்லை. கர்த்தாவே, அவர்கள் வாரும்... அதை எப்படி செய்வதென்று உமக்குத் தெரியும். நான் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறேன். 83பில்லி என்னை தொலைபேசியில் கூப்பிட்டான். நான் அப்பொழுது தான் சகோ. பாங்க்ஸுடன் வந்திருந்தேன். அவன், “அப்பா. நீங்கள்...” என்றான். பாருங்கள், ஜனங்கள் அங்கு காரோட்டி வருவதைக் காண்கிறேன். சில சமயங்களில் சந்துகளில் அவர்களை நான் கண்டு, என் கையை அவர்களுக்கு ஆட்டுகிறேன். அவர்களோ தங்கள் தலையை திருப்பிக் கொள்கிறார்கள். நீங்கள் அப்படி செய்யக் கூடாது. அன்றொரு நாள் நான் வசிப்பதற்காக டூசானில் ஒரு இடத்தை வாங்கத் தீர்மானித்தனர். சகோ. டோனி அங்கு ஓரிடத்தை, அதன் விலையைக் காட்டிலும் 3 அல்லது 4 மடங்கு அதிகம் கொடுத்து வாங்க நினைத்தார். அவரே தன் பங்காக அதற்காக அநேக ஆயிரம் டாலர்கள் கொடுக்க வேண்டுமென்று எண்ணினார். ஆனால் அவர் உள்ளே செல்லக் கூடிய ஓரே வழி - காவல்காரன் வெளியே நின்று கொண்டிருந்தான். அது ஒரு பெரிய... அந்த மாளிகைக்கு பக்கத்தில் வேறொரு கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அதைத் தான் வாங்க எண்ணினோம். அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் யாரையாகிலும் காண வேண்டுமென்றால், அவர்களிடம் அனுமதி எழுதி பெற வேண்டும். காவல்காரன் உள்ளே சென்று வெளியிலுள்ளவர்கள் உள்ளே வரலாமா என்று கேட்கிறான். நான் சகோ. டோனியிடம், “நான் அங்கு வசிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா? என் சகோதரர்களும் சகோதரிகளும் என்னைக் காண வந்து என்னுடன் கைகுலுக்கி எனக்காக தேவனுடைய ஆசீர்வாதங்களை கோருகின்றனர். டோனி, அங்கு நான் வசிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?” என்றேன். அவர், “நல்லது, நீங்கள்...” என்றார். நான், “டோனி, சபையும் மற்றவர்களும், ஜனங்களை வரவேண்டாமென்று சொல்வது என்றேன்”. நான் தொடர்ந்து, “நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறும் ஜனங்கள் இருந்தால் மாத்திரமே”. அவர்கள், “கர்த்தர் நீங்கள் இங்கு வசிக்க வேண்டுமென்று என்னிடம் கூறினார்.....”, “அல்லேலூயா! நான் இங்கு வசிக்கப் போகின்றேன். தேவனுக்கு மகிமை!”, “நீங்கள் எங்கள் குழுவுக்கு கூட்டங்களை நடத்த வேண்டுமென்று கர்த்தர் என்னிடம் கூறினார்”. “சரி ஐயா, தேவனுக்கு மகிமை” தேவன் என்னிடம் அப்படி கூறினார். சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அதை செய்யாவிட்டால், நிச்சயம் பின்வாங்கிப் போனீர்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதை நான் பகுத்தறிந்து காண முயல்கிறேன். நல்லவர்கள் அநேகர் இதன் காரணமாக உள்ளே வர முடியாமல் போய்விடுகின்றது. 84ஒரு பண்ணையில் வேட்டைக்குச் செல்லும் ஒரு மனிதனைப் போன்றது அது. பண்ணையாளர், “உள்ளே வாருங்கள், நீங்கள் வேட்டையாடிக் கொள்ளலாம்” என்கின்றார். நீங்கள் அங்கு சென்று அவருடைய பசுக்களில் ஒன்றையே சுட்டு கொன்றுவிடுகிறீர்கள். பசுவின் கீழே ஒரு முயல் ஓடுவதைக் காண்கின்றீர்கள். அந்த முயலையும் எப்படியோ சுட்டுவிடுகின்றீர்கள். ஒரு நாணயமான மனிதர் செய்வது போல் அங்குள்ள வாசலின் வழியாக வெளியே வருவதற்குப் பதிலாக, நீங்கள் மதிலின் மேலேறி குதித்து அதை இப்படி உடைத்து விடுகிறீர்கள். பண்ணையாளன், “இனிமேல் யாரும் உள்ளே வராதபடிக்கு வாசலில் காவல் வைக்கிறேன்” என்கிறார். அவரை நான் சிறிதளவும் கூட குற்றப்படுத்த மாட்டேன். இந்த வேட்டைக்காரர் என்ன செய்கிறார்? ஒரு நாணயமான வேட்டைக்காரன் கூட உள்ளே வராதபடிக்கு செய்துவிடுகிறார். அது எப்பொழுதும் அப்படித்தான் இருந்து வருகிறது. நன்மையானது முதலிடம் வகிக்காதபடிக்கு தீமை அதை தடை செய்துவிடுகிறது. அது எப்பொழுதும் அப்படித்தான். 85இந்த ஜனங்கள்... ஆயிரக்கணக்கானவர்கள் நல்லவர்களும், தேவையுள்ளவர்களும், அன்புள்ளவர்களும், தேவனுடைய கிருபையினால் நிறைந்தும் உள்ளனர். இப்படிப்பட்டவர்களை நாம் பெற்றுள்ளோம்... எப்படி இந்த ஜனங்கள் வருகின்றனர். நமக்கு அது வேண்டாம். ஆனால் இந்த மனிதன் வந்தார். பில்லி தொலைபேசியில் என்னிடம், “அப்பா, உடனே வாருங்கள். திருமதி. வால்டார்ஃப் இங்கு வந்திருக்கிறார்கள், அவர்களுடன் மரணத் தருவாயிலுள்ள சிலரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் உடனே அவர்களைக் காண வேண்டும்” என்றான். நான் விரைந்து அங்கு அடைந்தேன். அங்கு அடைந்தபோது அவர்கள், “இங்கு யாருமில்லை, ஒரு மனிதன் மாத்திரம் இந்த கட்டித்துக்குப் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் தலையணையின் மேல் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறார்” என்றனர். நான் சரியென்றேன், “அவரை உள்ளே அனுப்புகிறேன்” என்றான். நான் உள்ளே வந்தேன். அங்கு ஒரு காடிலாக் கார், அது போன்ற எதோ ஒரு பெரிய கார், நின்று கொண்டிருந்தது. நான் உள்ளே காரோட்டி சென்றேன். காரிலிருந்த மனிதன், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு என்னைத் தெரியாது. நான் வீட்டுக்குள் சென்ற போது, சகோதரி. வால்டார்ஃப் அங்கிருந்தார்கள். உங்களுக்குத் தெரியும், அவர்கள்... அவர்களுடைய விஷயம் உங்களுக்குத் தெரியும். இல்லையா? பாருங்கள், அவர்களைப் புற்று நோய் பீடித்திருந்தது. நான் அங்கு அடைவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அவர்கள் மரித்துவிட்டார்கள், அவர்களுடைய மருத்துவர் வந்து காண்பித்தார்... அது 18 ஆண்டுகளுக்கு முன்பு இருதயத்தில் புற்று நோய். இன்றைக்கு அவர்கள் உயிரோடிருக்கிறார்கள். அவர்கள் முன்பு ஆர்கன்ஸாவில் வசித்து வந்தார்கள். இப்பொழுது அவர்கள் பீனிக்ஸில் வசிக்கிறார்கள். அவர்கள் என்னிடம், “சகோ. வில்லி, இப்படி வந்து தொல்லை கொடுக்க எனக்குப் பிரியமில்லை, ஆனால் எனக்குத் தங்க வேறு இடமில்லை. இந்த ஜனங்கள்... இந்த ஸ்திரீ மரணத் தருவாயிலிருப்பதாக அவர்கள் கூறினார்கள். சகோ. வில்லி, என் கையில் ஒரு சிறு காணிக்கையை உங்களுக்கு கொண்டு வர வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் என்னால் முடியவில்லை. நான் 'பிளாக்பெர்ரி ஜெல்லி' செய்து குப்பியில் அடைத்து கொண்டு வந்திருக்கிறேன்” என்றார்கள். 86ஓ! நான் சென்று அவர்கள் கொண்டு வந்த ஜெல்லி நிறைந்த குப்பிகளை கண்டபோது, நான் புசிக்கக் கூடாத அளவுக்கு அது புனிதமாகக் காணப்பட்டது. அந்த அருமையான வயோதிப ஸ்திரீ, சுமார் 70 வயதிருக்கும். நான், “சகோதரி ஹாட்டி, என்னால் அதை மறுக்க முடியவில்லை” என்றேன். அந்த விதவை மூன்று காசுகளைப் போடுவதை இயேசு கண்டார். அவர் அவளைத் தடை செய்யாமல் விட்டுவிட்டார். தேவன் அவர்களுக்கு பலனளிப்பார். எனவே, கர்த்தர் அவர்கள் கூட்டி கொண்டு வந்திருந்த ஸ்திரீக்கு பரிபூரண சுகமளித்தார், அவளுடைய போதகர் மனதில் என்ன உள்ளது என்றும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தினார். ஓ, அவர்கள் ஆர்ப்பரித்து சென்றனர். 87பில்லி உள்ளே வந்து, “நான் கூறின மனிதர் போய்விட்டார். அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான். நான் அவனிடம், “காரிலுள்ள அந்த மனிதன் யார்?” என்று கேட்டேன். அவன், “ஓ, யாரோ ஒருவர் ஆரிகானிலிருந்து வந்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு சொப்பனம் கண்டாராம். அதன் அர்த்தத்தை கூற முடியும் என்னும் தவறான நம்பிக்கையை என்னால் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஏற்கனவே 300 சொப்பனங்கள் இங்குள்ளன. அதை ஒரு தாளில் எழுதி கொடுக்கும்படி கூறினேன். ஏற்கனவே இங்குள்ள குவியலுடன் அதையும் சேர்த்துவிடுகிறேன்” என்றார். “அவரை உள்ளே கொண்டு வா. அவருக்கு ஐந்து நிமிடங்கள் கொடு” என்றேன். அந்த மனிதன் உள்ளே நடந்து வந்த போது, அவர், “நான் ஆரிகானைச் சேர்ந்த சங்கை வாக்கர்” என்றார் (அதுதான் அவருடைய பெயர் என்று நினைக்கிறேன்). அவர் ஏதோ ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன் - பிரஸ்பிடேரியன், எபிஸ்கோபலியன் போன்ற ஏதோ ஒன்று. அவர், “நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை சந்தித்திருக்கிறேன், நான் கிராண்டு பாஸ்ஸுக்கு வந்திருந்தேன் - கிராண்டு பாஸ் அல்ல. அந்த இடத்தின் பெயர் எனக்கு மறந்துவிட்டது. அங்கு நாடு முழுவதும்... ஒவ்வொரு காலை செய்தித்தாளிலும் தலைப்பு செய்தியாக இது கொடுக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அதைக் குறித்து அறிந்திருந்தனர். நீங்கள் இருந்த கட்டிடத்துக்கும் கூட என்னால் வர முடியாதபடிக்கு அவ்வளவு ஜன நெருக்கடி. ஆனால் ஒரு நாள் நீங்கள் தெருவில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் உங்களிடம் வந்தேன். நான்கைந்து பேர்கள் உங்களைச் சுற்றிலும் இருந்தனர். நான் உங்களோடு கைகுலுக்கினேன். நான் சகோ. வாக்கர் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நீங்கள் யாரென்று என்னிடம் கூறினீர்கள். நாமிருவரும் ஓரிரண்டு வார்த்தைகள் உரையாடினோம். அப்பொழுது உங்களுடன் இருந்த 3 அல்லது 4 பேர்கள் உங்களைத் தள்ளிக் கொண்டு சென்றுவிட்டார்கள். உங்களை நான் குறைகண்டு பிடிப்பவன் (Critic) அல்ல, உங்களை ஆதரிப்பவனும் அல்ல. எனக்கு இது விளங்கவில்லை” என்றார். 88அவர் தொடர்ந்து, “இப்படியாக சில ஆண்டுகள் கடந்தன. அதன் பின்பு 3 ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் ஒலிநாடாக்களைக் கேட்கும் படிக்கு என்னை ஒருவர் அழைத்தார். அவர் ஒலிநாடாக்களை போட்டார். அப்படி அவர் செய்தபோது, அவர் பேசுவதைக் கேட்டேன். நீங்கள் தீர்க்கதரிசியென்று அவர் நம்புகிறார். நான் அவரிடம் எனக்கு அதைக் குறித்து ஒன்று தெரியாதென்றும் ஒருக்கால் அப்படியிருக்கலாம் என்று கூறிவிட்டேன் என்றார். அவர் தொடர்ந்து, வேறொருவர் எங்கள் நகரத்துக்கு வந்து, கூட்டம் நடத்தினார். அவர், “இந்நாளின் தேவனுடைய தீர்க்கதரிசி நானே” என்று உரிமை கோரினார். தீர்க்கதரிசியாக நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? “நான் கேள்விப்படுகிறேன்... ஒலிநாடாக்களைக் கேட்கும் இங்குள்ள மனிதன், கிழக்கிலுள்ள வில்லியம் பிரான்ஹாம் இந்நாளின் தீர்க்கதரிசி என்று கூறுகிறார்” என்றார். அவர் மேலும், “ஆனால் கூட்டம் நடத்த வந்த இந்த மனிதனோ” (அவர் பெயரை நான் இங்கு குறிப்பிடப் போவதில்லை, அப்படி செய்வது நன்றாயிருக்காது பாருங்கள்?) “எனக்கு வில்லியம் பிரான்ஹாமைத் தெரியும். அவருடைய உபதேசம் அனைத்தும் தவறு. அவர் பெந்தெகொஸ்தேயினர் அல்ல. அந்நிய பாஷை பேசுதல் ஆரம்ப அடையாளம் என்பதை அவர் நம்புவது கிடையாது. மேலும் இந்த பெரிய தீர்க்கதரிசிகள், சிறிய தீர்க்கதரிசிகள் என்கிறார்களே, அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்று நீங்கள் தீர்க்கதரிசியாயருக்கின்றீர்கள். இல்லையென்றால் நீங்கள் தீர்க்கதரிசி அல்ல. அவ்வளவு தான் என்று கூறிவிட்டார், என்றார். 89அவர் மேலும்... மிஸ்டர், இதைக் குறித்து உங்களுடன் நான் விவாதிக்க வரவில்லை. உங்களைக் குறித்து அவர் கூறினதையே உங்களுக்கு எடுத்துரைத்தேன். அவர் தீர்க்கதரிசியென்று உரிமை கோரிக் கொண்டார். “நான் தான் இக்காலத்தின் தீர்க்கதரிசி” என்று அவர் கூறினார் என்றார். அவர் அந்த மனிதனிடம், “அப்படியா? கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து உங்களுடன் கூட இருப்பாராக என்று சொல்லிவிட்டாராம்”. அவர் அதைக் குறித்து எந்த கவனமும் செலுத்தவில்லை. அவர் தமது சகோதரரிடையே 3 அல்லது 4 கூட்டங்களை தொடர்ந்து நடத்தினாராம். அவர் அஞ்சலகத்துக்கு சென்று, “எனக்கு வரும் தபால்களை நானிருக்கும் இடத்துக்கு அனுப்ப வேண்டாம். அதை இங்கேயே வைத்திருங்கள். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு நான் திரும்பி வந்து இவைகளை பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டார். அவர்களும் அதன் மேல் ஒரு காகிதத்தை ஒட்டி, வேறிடத்துக்கு அனுப்ப வேண்டாம் என்று அதன் மேல் எழுதிவிட்டனர். அவர் சென்று தன் மகளைக் கண்டார். திரும்பி வரும் வழியில் ஒரு ஆலயத்தில் நிறுத்தி அன்றிரவு கூட்டத்தில் பங்கு கொண்டார். “அடுத்த நாள் காலையில் அஞ்சலகத்துக்கு சென்று பொதுவான தபால்களை கொண்டு வா” என்னும் எண்ணம் அவருடைய மனதில் எழுந்தது. அவர் தபால்களைக் கொண்டு வந்த போது. அவர் மகள் அனுப்பின தபால் ஒன்று இருந்தது. அது எப்படியோ அஞ்சலகத்தின் மூலம் அவளுடைய மகளை அடைந்தது. அவள் அதை இவருக்கு அனுப்பியிருந்தாள். 90அவர் அதை திறந்து பார்த்து போது, அது ஒலி நாடாக்களைப் போடும் திரு. ஹில்லி பிராண்டிடமிருந்து வந்த ஒன்று. ராய் பார்டர்ஸ் (அவர் நமது மேலாளர்களில் ஒருவர். உங்களுக்குத் தெரியும்) திரு. ஹில்லி பிராண்டுக்கு, நான் இங்கு இருபத்தெட்டாம் தேதியிலிருந்து முதலாம் தேதி வரைக்கும் கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும், அவரே நேரடியாக வந்து ஒழுங்குகளை கவனிக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர், “இந்த ஆட்கள் என்னை இதில் இழுக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறிவிட்டு அதை காகிதக் கூடையில் போட்டுவிட்டார். அவர் சென்று அன்றிரவு கூட்டம் நடத்தினார், அடுத்த நாள் காலையில் அவர் அந்த அறையிலேயே தன் இருதயத்தைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். 91அவர், “சகோ. பிரான்ஹாமே, நான் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டுமென்பதை உணருகிறேன். நான் உறங்கிக் கொண்டிருந்தேனா அல்லது என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவில்லை. நான் சொப்பனம் கண்டேன். நான் உறங்கினேன் என்று நினைக்கிறேன். அப்பொழுது நான் ஒரு சொப்பனம் கண்டேன். அங்காடிக்கு சென்றிருந்த என் மகன் ஒரு சாக்குக்குள் கைவிட்டான். அது ஆப்பிள் பழங்கள் நிறைந்த சாக்கு. அவன் அதில் கையை விட்டபோது, அது கவிழ்ந்து போனது. நான் ஆப்பிள் பழங்களைப் பொறுக்கச் சென்ற போது, அவையனைத்தும் ஒரு கடி கடிக்கப்பட்ட பச்சை ஆப்பிள் பழங்கள் என்பதைக் கண்டேன். அவைகளை நான் பொறுக்கி சாக்குக்குள் போட்டேன், அவைகளில் சில உருண்டு புல் தரையில் விழுந்தன. அவைகளை புல் தரையிலிருந்து பொறுக்க நான் முயன்றபோது, அவை சங்கிலிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வேலியின் அடியில் உருண்டு சென்றன. அந்த இடத்தில் இந்த பெரிய நெடுஞ்சாலை போய்க் கொண்டிருந்தது. நான் கிழக்கு திசையில் நோக்கினபோது, இந்த சங்கிலித் தொடர் கிழக்கிலுள்ள ஒரு பெரிய கற்பாறையில் மாட்டப்பட்டிருந்தது. நான் அங்கு சென்று சங்கிலியை அவிழ்த்து விட்டு மறுபக்கம் சென்று அந்த மனிதனுக்காக ஆப்பிள்களைப் பொறுக்கலாமென்று எண்ணினேன்”. “நான் சங்கிலியை அவிழ்த்து கீழே விட்டபோது”, 92“ஒரு சத்தம் உண்டாகி பூமியை அசைத்தது”. “என் கால்களுக்கு கீழே இருந்த பூமி அசைந்தது”. அது நின்றபோது, “ஒரு சத்தத்தை நான் கேட்டேன்”, “சகோ. பிரான்ஹாமே, அது உங்கள் சத்தம்!, ஏதோ ஒன்று என்னிடம், நான் இன்னும் ஒரு முறை இந்த பாதையின் வழியாக சவாரி செய்வேன்” என்று கூறினதென்று நானறிவேன். நான் அந்த கற்பாறையை நோக்கினபோது, அது மேகங்களையும் கடந்து உயர சென்றது. அது கிழக்கிலிருந்து மேற்கில் சென்று. கூர்நுனிக் கோபுர வடிவில் அமைந்திருந்தது. நான் கிழக்குக்கு ஓடினபோது நீங்கள் ஒரு குதிரையின் மேல் அங்கு இருந்தீர்கள். என் வாழ்க்கையில் நான் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை, பெரிய வெள்ளைக் குதிரை. அதன் வெண்மை பிடரி மயிர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. நீங்கள் ஒரு இந்தியத் தலைவனைப் போல் உடுத்தியிருந்தீர்கள், அவர்கள் உடுத்துவதற்கு உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும், மார்க்கவசம், கைகளில் வளையல்கள் போன்றவை. உங்கள் கைகளை நீங்கள் இப்படி உயர்த்தியிருந்தீர்கள், அந்த குதிரை இராணுவக் குதிரைபோல் இப்படி துள்ளி துள்ளிக் கொண்டிருந்தது. நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். நீங்கள் லகானை இழுத்து மேற்கு நோக்கி சவாரி செய்து சென்றீர்கள். 93நான் கீழே பார்த்தபோது, “அங்கு நிறைய விஞ்ஞானிகள் இருந்தனர்” என்றார். அடுத்த நாள் காலை (அது சனிக்கிழமை) நான், விஞ்ஞானிகள் பிசாசினால் உண்டானவர்கள் என்னும் பொருளின் பேரில் பிரசங்கம் செய்தேன். அவர் தொடர்ந்து, இந்த விஞ்ஞானிகள் கண்ணாடிக் குழாய்களில் ஊற்றி கலந்து கொண்டிருந்தனர். நீங்கள் குதிரையை நிறுத்தி, உங்கள் கைகளையுயர்த்தி உரத்த சத்தமாய், “நான் இன்னும் ஒரு முறை இந்த பாதையில் சவாரி செய்வேன் என்றீர்கள். அப்பொழுது பூமி முழுவதும் அசைந்தது. அவர்களும் அசைந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உங்களையும் மேல் நோக்கிப் பார்த்து, அது என்னவென்று புரியவில்லை என்பதற்கு அறிகுறியாக தங்கள் தோள்களைக் குலுக்கிவிட்டு தங்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்” நீங்கள் மேற்கு நோக்கி செல்லத் தொடங்கினீர்கள். அப்பொழுது தன்னை தீர்க்கதரிசியென்று உரிமை கோரிக் கொண்ட அந்த மனிதனைக் கண்டேன். அவர் வெள்ளையும் கறுப்பும் கலந்த குதிரையின் மேல் சவாரி செய்து வந்தார். இந்த பெரிய குதிரையின் பின்னால் அவர் வந்தார். நீங்கள் சவாரி செய்து கொண்டிருந்த குதிரை மேகங்களுக்கு மேல் சென்றுவிட்டது. பாதை இவ்வளவுதான் அகலமாயிருந்தது அந்த குதிரை ஓடின போது, நீங்கள் அணிந்திருந்த சிறகுகளும் மற்றவைகளும் காற்றில் பறந்தன. குதிரையின் பிடரியும் வாலும் கூட காற்றில் பறந்தன. அந்த பெரிய வெள்ளை குதிரை சரியாக வரிசையில் ஓடிக் கொண்டிருந்தது. இந்த மனிதன் உங்களுக்குப் பின்னால் சவாரி செய்து வந்தார். “அவர் கனடாவிலிருந்து புறப்பட்டு வந்தார் என்றார். இந்த மனிதன் கனடாவில் வசிக்கிறார். அவர் மேலும், அவர் தமது சிறிய குதிரையைக் கொண்டு உங்களுடைய பெரிய குதிரையைக் கீழே தள்ளப் பார்த்தார் - அதன் இடுப்பை உங்கள் குதிரையின் மேல் மோதி... ஆனால் அந்த பெரிய குதிரையை அவரால் அசைக்க முடியவில்லை. அது ஓடிக் கொண்டேயிருந்தது. திடீரென்று நீங்கள் திரும்பினீர்கள். நீங்கள் மூன்றாம் முறையாக அப்பொழுது பேசினீர்கள், ஆனால், ”நான் சவாரி செய்வேன் என்று கூறினது அது இரண்டாம் முறை. நீங்கள் முன்பு பேசினது போல் பேசவில்லை. நீங்கள் கட்டளையிட்டீர்கள். நீங்கள் திரும்பிப் பார்த்து அந்த மனிதனை பெயர் சொல்லி அழைத்து, “இங்கிருந்து போய்விடு! தேவன் ஒரு மனிதனை இதற்கென்று நியமித்தாலொழிய யாரும் இந்த வழியாக சவாரி செய்து வரமுடியாது. இங்கிருந்து போய் விடு” என்று கட்டளையிட்டீர்கள்“. 94“அந்த மனிதன் திரும்பினார். அவர் எனக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். கறுப்பும் சாம்பல் நிறமும் கலந்த அந்த குதிரையின் இடுப்பில் அவருடைய கையொப்பம் இருந்தது...” அவர் கடிதத்தில் கையொப்பமிட்டிருந்த அதே விதமாக அவர் வடக்கு நோக்கி சவாரி செய்து சென்றார். “நீங்கள் தொடர்ந்து சவாரி செய்தீர்கள். அந்த பெரிய குதிரை உங்களால் இயன்றவரை உங்களை மேற்குக்குக் கொண்டு சென்றது. நீங்கள் நின்று இப்படி கையையுயர்த்தினீர்கள் என்றார். பிறகு அவர் அழத் தொடங்கினார். அவர். ”சகோ. பிரான்ஹாமே, அங்கு நின்று கொண்டிருக்கும் குதிரையை பாருங்கள், போர் தலையணி போன்றவை, பளபளப்பான மார்க்கவசம் ஆகியவை. உங்கள் கரங்களை நீங்கள் சிறிது நேரம் உயர்த்தி, குதிரையை மறுபடியும் நோக்கி, லகானை மறுபடியும் கையில் பிடித்து, 'இன்னும் ஒரு முறை இந்த பாதையின் வழியாக சவாரி செய்வேன்' என்றீர்கள். அப்பொழுது பூமி முழுவதும் இப்படியும் அப்படியுமாக அசைந்தது. என்னில் சிறிதும் கூட ஜீவன் இல்லாமல் போயிற்று. நான் கற்பாறையின் பக்கத்தில் கீழே விழுந்தேன். அப்பொழுது நான் உறக்கத்தினின்று எழுந்துவிட்டேன்“ என்றார். அவர், “ஐயா, இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். “எனக்கு தெரியாது என்றேன்”. 95அடுத்த நாள் காலை ஜூனியர் ஜாக்ஸன், அவர் கூர்நுனிக் கோபுரத்தைக் குறித்த சொப்பனம் கண்டார் என்று உங்களுக்குத் தெரியும், நான் மேற்கே சென்றேன். அதற்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு அவர் ஒரு சொப்பனம் கண்டதாகவும் அது அவர் இருதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறதென்றும் அதை அவர் என்னிடம் சொல்லியாக வேண்டுமென்று கூறினதும் உங்களுக்கு ஞாபகமிருக்கும். நான், “பில்லி...” என்றழைத்தேன். அங்கு சுமார் 20 பேர் நின்று கொண்டிருந்தனர். அவன், “ஜூனியர் ஜாக்ஸன் இங்கு வந்திருக்கிறார். அவர் அந்த சொப்பனத்தை உங்களிடம் கூற வேண்டும் என்கிறார்” என்றான். நான், “அவரை ஐந்து நிமிடங்களுக்கு உள்ளே அனுப்பு”, என்றேன். அவர் தன் மனைவியையும் கூட அழைத்து வந்தார். அவர் “சாட்சிக்காக” அவளை அழைத்து வந்ததாக கூறினார் அவர், “சகோ. பிரான்ஹாமே, நான் கண்ட சொப்பனத்தில் நானும் என் மனைவியும் வெளியே சவாரி செய்து கொண்டிருந்தோம். நான் கிழக்கே பார்த்த போது, ஒரு புள்ளியை போன்று பறக்கும் தட்டைப்போல் ஒன்று தென்பட்டது”. 96பாருங்கள், பறக்கும் தட்டு என்னவென்று உலகம் அறியாமலிருக்கிறது. ஆனால் உங்களுக்குத் தெரியும்... உங்களுக்குத் தெரியும். அது என்னவென்று நமக்குத் தெரியும். அது என்ன நடக்கிறதென்று பார்த்து நியாயம் விசாரிப்பதற்காக வரும் தூதர்கள், பாருங்கள். அது 'பென்டகன்' போன்ற வேவு பார்க்கும் இடத்துக்கு வந்து. அவர்கள் மின்னலைப் போல் அங்கிருந்து வேகமாக சென்று விடுகின்றனர். அது என்னவென்று அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, அவர்கள் மறைந்து விடுகின்றனர். பாருங்கள், அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். அவர்கள் அதை பறக்கும் தட்டுகள் என்றழைக்கின்றனர். அவர்களுக்குத் தெரியாது. 97அவர், “அது வருவதைக் கண்டேன், அது என்னவென்று நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அது குதிரையின் மேலிருந்த ஒரு மனிதன். அவர் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் எனக்கு முன்னால் இறங்கப் போகிறார் என்று அறிந்து, காரை நிறுத்தி விட்டு, வெளியே குதித்தேன். அப்படி செய்த போது, சாலையில் ஒரு இராணுவ வெள்ளை குதிரை துள்ளித் துள்ளி நின்று கொண்டிருந்தது என்றார். அது வார்த்தை, உங்களுக்கு தெரியும். அது துள்ளித் துள்ளி நடந்து கொண்டிருந்தது. அவர், ஒரு மனிதன் அந்த குதிரையின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் மேற்கு பாகத்து உடைகளை அணிந்திருந்தார். அவர் மாட்டுப் பையன் (COWBOY) அல்ல. “ஆனால் மாடு மேய்ப்பவர்களின் தலைவனைப் போல் அவர் காணப்பட்டார்” (பாருங்கள், அவருடைய முக்கிய அதிகாரம் அனைத்தும் மேற்கிலிருந்து, இந்தியர்களுக்குத் தலைவனான இந்தியனாக, மாடு மேய்ப்பவர்களுக்கு...). “அவர் தொப்பியை கீழே இழுத்துவிட்டிருந்தார். அவர் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என் பக்கம் திரும்பினபோது, அது நீங்கள், சகோ. பிரான்ஹாம், நீங்கள் எப்பொழுதும் பேசுவது போல என்னிடம் பேசவில்லை. என்னை 'ஜூனியர்' என்று மூன்று தரம் அழைத்துவிட்டு, ”நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறேன்“ என்றீர்கள். பிறகு குதிரையின் லகானைப் பிடித்து இழுத்தீர்கள். ”அது மூன்று சுற்று சுற்றி விட்டு, வானத்தை நோக்கி சென்றுவிட்டது. நீங்கள் மேற்கு திசையை நோக்கி சென்று மறைந்துவிட்டீர்கள்“ என்றார். 98அவர் தொடர்ந்து, “ஒரு நிமிடம் நான் சுற்று முற்றும் பார்த்தேன். அப்பொழுது நீங்கள் ஏறியிருந்ததைக் காட்டிலும் சிறிய குதிரை, ஆனால் அதே ஜாதிக் குதிரை அங்கு நின்று கொண்டிருந்தது. அவர் தான் இதை அனுப்பியிருப்பார் என்று நினைத்து அதன் மேலேறினேன்” என்றார். ஜூனியர் குதிரையின் மேல் கொஞ்சம் சவாரி செய்திருக்கிறார். அவர், “உங்கள் சேணம் பாத வளையம் எல்லாம் உங்களுக்கு எவ்வளவு நன்றாக பொருந்துகிறது. சகோ. பிரான்ஹாம், இது எனக்கு நன்றாக பொருந்துகிறது என்று நினைத்து லகானை இழுத்து ஆகாயம் நோக்கி சென்றேன். பிறகு நான் லகானை இழுத்து குதிரையை நிறுத்தி, அதை மறு திசை திருப்பி வந்த வழியே திருப்பிச் சென்றேன். நான் திரும்பிச் சென்றபோது, குதிரையை நிறுத்தி, கீழே இறங்கி என் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த குதிரை மறைந்துவிட்டது” என்றார். அவர் உணர்ச்சி வசப்பட்டிருந்தார். 99நேற்றைக்கு முந்தின நாள், மூன்று நாட்களுக்கு முன்பு, லியோ மெர்சியர், அதே போன்ற சொப்பனத்தைக் கண்டவராய் இங்கு வந்திருந்தார். மற்றவர்களுடைய சொப்பனத்தைக் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது. ஒரு பெரிய வெள்ளை ஆண் குதிரையை ஒரு கறுப்பு பெண் குதிரையுடன் இனசேர்க்கை செய்ய முயன்றதாக அவர் சொப்பனம் கண்டார். அவர் நடுக்க முற்றிருந்தார். நான் அங்கு நடந்து சென்று அவரை 'லியோ' என்றழைத்து. நான் செய்ததை அவரிடம் கூறினதாக அவர் சொன்னார். அது என்னவென்று இங்கு நான் கூற விரும்பவில்லை. நான் செய்ததை அவரிடம் கூறினேனாம். அவர், “இது உங்களுக்குத் தெரியாதா?” என்று என்னைக் கேட்டார். எட் டால்டனுக்கு ஒரு மருமகன் இருப்பது எனக்குத் தெரியாது. அந்த மருமகனுக்கு இந்த பெயரைக் கொண்ட ஒரு நாய் இருந்தது. “லியோ நீங்கள் உறக்கத்தினின்று எழுந்திருக்கும் போது உங்கள் சொப்பனம் உங்களுக்கு ஞாபகம் வரும்!” அவர், “நான் அப்படிப்பட்ட கட்டளையைக் கேட்டதேயில்லை” என்றார். 100அந்த நேரத்தில் ராய் ராபர்ஸன் உள்ளே வந்தார். அவர், “சகோ. பிரான்ஹாமே, முதன்முறையாக நீங்கள் சபையை விட்டு செல்வதற்கு முன்பு உங்களுக்கு ஞாபகமுள்ளதா? நீங்கள் பாலஸ்தீனாவில் உட்கார்ந்து கொண்டிருப்பதாக நான் சொப்பனம் கண்டேனே, நாம்... குழுவின் (Board) அங்கத்தினர்கள் அனைவரும் கர்த்தருடைய இராப்போஜன பந்தியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போல் உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்பொழுது நீங்கள் பேசினீர். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியவில்லை. அப்பொழுது ஒரு வெள்ளை மேகம் கீழே இறங்கி வந்து உங்களைக் கொண்டு சென்றது” என்றார். சகோ. ராய் கண்ட சொப்பனம் எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? அவர், “ஒரு வெள்ளை மேகம் உங்களைக் கொண்டு சென்றது. நீங்கள் போய் விட்டீர்கள். நான் அலறிக் கொண்டும் கதறிக் கொண்டும் தெருக்களின் வழியாக நடந்து சென்றேன். இந்த ஊனமுற்ற கரங்கள்... அவர் என்னைக் கண்டபோது மண்ணை மிருதுவாக்கும். ஆயுதத்தை கீழே போட்டு விட்டு அழத் தொடங்கினார். அவரை நான் காணவில்லை, எனவே அந்த சொப்பனத்தை அவர் என்னிடம் கூறவில்லை... அவர் தோட்டத்தில் மண்ணை மிருதுவாக்கிக் கொண்டிருந்தார். 101அவர், “நீங்கள் போய்விட்டீர்கள். உங்களைத் தேடி நான் தெருக்கள் எங்கும் நடந்து சென்றேன். ஆனால் உங்களை எங்கும் காணமுடியவில்லை. நான ”ஓ, சகோ. பிரான்ஹாமே, சென்றுவிடாதீர்கள்“ என்று கதறினேன். ஒரு வெண் மேகம் வந்து உங்களை எங்களிடமிருந்து பிரித்து மேற்கு திசையில் கொண்டு சென்றது என்றார். அது கூர்நுனிக் கோபுரம் போன்றவைகளுக்கு முன்பு, அவர், அது உங்களை மேற்கு திசையில் கொண்டு சென்றது. நான் அழுது கொண்டே உங்களைத் தேடி தெருக்களில் நடந்து சென்றேன். சற்று அழிந்து நான் சென்று மேசையருகில் உட்கார்ந்து கொண்டேன். நான் நோக்கின போது, மேசையின் தலைமை பாகத்தில் உங்கள் இவ்வளவு பாகம் பனி வெண்மையாயிருக்கக் கண்டேன். நீங்கள் அங்கு நின்று கொண்டு அதிகாரத்தோடு பேசினீர்கள். அங்கு ஊகம் எதுவுமில்லை. நீங்கள் கூறினதை எல்லோரும் புரிந்து கொண்டனர் என்றார். ஓ, என் சகோதரனே, சகோதரியே, “அதன் அர்த்தம் என்னவென்று நான் அறிந்திருக்கிறேன் என்று நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியாக கூற முடியுமா? பாருங்கள்! விழிப்புள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவுடன் நெருங்கியிருங்கள். சுவிசேஷத்தின் ஊழியக்காரன் என்னும் முறையில் உங்களை இப்பொழுது எச்சரிக்கிறேன்... மூடத்தனமான எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்! உங்கள் உள்ளுக்குள்ளே இருக்கும் உள்ளானது வார்த்தையுடன் நங்கூரமிடப்பட்டு நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வரைக்கும் அங்கேயே நிலைத்திருங்கள். ஏனெனில் அது ஒன்று மாத்திரமே... ஏனெனில் நாம் இதுவரை வாழ்ந்த காலத்திலேயே மிகவும் வஞ்சகமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவர்கள் வஞ்சிப்பார்கள். ஏனெனில் அவர்கள் மேல் ஒரு அபிஷேகம் தங்கியுள்ளது. அவர்களும் மற்றவர்களைப் போல் எந்த அற்புதம் வேண்டுமானாலும் செய்யமுடியும். 102உங்கள் வாழ்க்கையை சுத்தமாக்குங்கள். உங்கள் கடன்கள் செலுத்தி தீருங்கள். யாருக்கும் கடன்படாதிருங்கள். இயேசு கூறினார், உங்கள் வீட்டு வாடகை போன்றவைகளை நான் கூறவில்லை. அதையெல்லாம் நீங்கள் செய்தாக வேண்டும். உங்கள் கைகளிலிருந்து எல்லாவற்றையும் விலக்குங்கள். எல்லாவற்றையும் சரிபடுத்துங்கள். ஆயத்தமாகுங்கள்! ஆயத்தமாகுங்கள்!ஞாபகம் கொள்ளுங்கள், ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்று கர்த்தரின் நாமத்தினால் உரைக்கிறேன்... இந்த வாரம் நான் மலைகளுக்குச் செல்கிறேன். குறிப்பாக அணில் வேட்டைக்கு அல்ல. அணில் வேட்டையாட எனக்குப் பிரியம்தான். ஆனால், “ஓ, தேவனே, எந்த வழியாக செல்ல வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. இதை நான் இழந்து போக விரும்பவில்லை! எனக்குதவி செய்யும் என்று தேவனிடம் முறையிட வேண்டும் என்னும் நோக்கத்துக்காக அங்கு செல்கிறேன்”. எனக்காக நீங்கள் ஜெபியுங்கள். ஜெபிப்பீர்களா? உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருப்பேன். தேவனுடைய இரக்கங்களினால், உங்கள் ஒவ்வொருவரையும் நான் சந்திப்பேன் என்று நம்புகிறேன். இங்குள்ள இந்த தேசத்தைக் காட்டிலும் சிறந்த ஒரு தேசத்தில் நாம் சந்திப்போம். 103நாம் எதற்காக இங்கு வருகிறோம்? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? விளையாடவா இங்கு வருகிறோம்? ஒரு விடுதியில் சந்திப்பது போலவா இங்கு நாம் வருகிறோம்? சபை முழுவதும் சரியாயிருக்கும் வரைக்கும் கிறிஸ்து வரமுடியாது. அவர் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நாம் முடிவில் வந்துவிட்டோம் என்று நம்புகிறேன். கலிபோர்னியாவைப் பாருங்கள். கலவரங்களைப் பாருங்கள். இனக்கலவரம் காரணமாக 19 பேர் கொல்லப்பட்டதைப் பாருங்கள். மார்டின் லூத்தர் தமது ஜனங்களை படுகொலைக்கு நடத்திச் செல்வாரென்று அண்மையில் நான் உங்களிடம் கூறவில்லையா? எத்தனை பேருக்கு அது ஞாபகமுள்ளது? அதற்கு கறுப்பு நிறத்தவர் காரணமல்ல, அவர்களைத் தூண்டிவிடும் தலைவர்கள் காரணம். அது ஒருமைப்பாடோ, ஒதுக்குதலோ அல்ல. அதை என்ன வேண்டுமானாலும் நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! அது பிசாசு! அது உண்மை. அது வெள்ளையர், கறுப்பர் என்றல்ல எல்லோருமே அது பிசாசு! 104மனிதனின் யோசனா சக்திகள் நிலைகுலைந்துவிட்டன. இனி நம்பிக்கையேயில்லை. அது நம்பிக்கையை கடந்துவிட்டது. எல்லாமே நொதிக்கிற இரணமாயுள்ளது. மனிதனின் யோசனா சக்திகள்... அவர்களால் தீர்மானம் எடுக்க முடிவதில்லை. நான் அரசியல்வாதியல்ல... டிமாக்ரட்டும் அல்ல, ரிபப்ளிக்கனும் அல்ல. அவர்கள் அனைவருமே அசுத்தமானவர்கள். நான் ஆதரிப்பது ஒரு ராஜ்யத்தை மாத்திரமே, அதுதான் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம். அவ்வளவுதான். இப்பொழுது காணும் ஆட்டப்படும் பொம்மைகளைப் போன்று (Puppets) உலகில் நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? டெக்ஸாஸிலுள்ளவர்களை போல. அவர்கள், “ஜனங்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு கம்யூனிஸம் வேண்டுமானால், கம்யூனிஸம் தருவோம். அவர்களுக்கு ஒருமைப்பாடு வேண்டுமானால், ஒருமைப்பாடு தருவோம். அவர்களுக்கு ஒதுக்குதல் வேண்டுமானால்... எதுவானாலும் என்கின்றனர். மனிதன் எங்கு சென்றுவிட்டான்! ஓ, தேவனே, அது பிரசங்க பீடத்தைப் போலாகிவிட்டது. மனிதன் எங்கே! கொள்கைக்காக நிற்கும் ஆண்மைத்தனம் கொண்ட மனிதன் எங்கே! கொள்கைக்காக நிற்கும் பெண்கள் எங்கே! கொள்கைக்காக நிற்கும் சபை எங்கே! வழவழவென்று ஒத்துப்போகும் ஆவியுடன் நான் சிறிதளவு நேரத்தைக் கூட செலவழிக்க மாட்டேன். ஒரு ஸ்திரீ ஸ்திரீயாயிருந்தால், அவள் சீரிய பண்புள்ளவளாய் இருக்கக் கடவள். ஒரு மனிதன் மனிதனாயிருந்தால், அவன் ஆண்மைத்தனம் கொண்டவனாய் இருக்கக்கடவன். 105அவன் ஜனாதிபதியாயிருந்தால்... நாம் பெற்றிருந்த ஜான் குவின்சி ஆடம்ஸ் போன்றவர் எங்கே? நம்முடைய ஆபிரகாம் லிங்கன் போன்றவர் எங்கே - அவர்களெல்லாரும் கொள்கைக்கு உறுதியாக நின்றவர்கள். நம்முடைய பாட்ரிஸி ஹென்றி எங்கே? அவர், “எனக்கு சுதந்தரம் கொடுங்கள், இல்லையேல் மரணத்தைக் கொடுங்கள்” என்றார். உண்மைக்கு நிற்கும் மனிதன் எங்கே? முழு உலகமே அவனுக்கு விரோதமாய் இருந்தாலும், உண்மைக்காக போராடி அதற்கு உறுதியாய் நின்று, அதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராயிருக்கும் மனிதர் எங்கே? இன்று உலகில் நம்முடைய ஆர்னால்டு வான் விங்கல் ரீட்டைப் போன்றவர் எங்குள்ளனர்? நேர்மையுள்ள மனிதர் எங்கே? ஆவியைக் கொண்ட மனிதர் எங்கே? அவர்கள் வழவழவென்றிருந்து எங்கு நிற்கின்றனர் என்பதை அறியாமலிருக்கின்றனர். தேவனே, இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதனின் கொள்கையைக் கடைபிடிக்கும் போதகனாக, “வானமும் பூமியும் ஒழிந்து போம், நான் ஒரு போதும் தவறுவதில்லை. இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்னும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் உறுதியாய் நிற்கும்படி செய்வீராக”. நாம் எழுந்து நிற்போம். நம் இருதயங்களை கிறிஸ்துவின் அன்பில் இணைக்கும் பிணைப்பு ஆசிர்வதிக்கப்படுவதாக ஒரே மனதுள்ளவர்களின் ஐக்கியம் மேற் கூறியது போன்றிருக்கும் இப்பொழுது கைகளை கோர்த்துக் கொள்ளுங்கள் நாம் பிரிந்து செல்லும் போது அது உள்ளில் வேதனை தருகிறது இருப்பினும் நாம் இருதயத்தில் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும் இயேசுவின் பாதங்களில் நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும் நாம் சந்திக்கும் வரைக்கும். நாம் சந்திக்கும் வரைக்கும் நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும் தேவன் உங்களோடிருப்பாராக. 106இப்பொழுது நாம் தலைவணங்குவோம். சகோ. நெவில் ஜெபம் செய்து நம்மை அனுப்புவார். இன்றிரவு மறுபடியும் வாருங்கள். கூடாரத்தில் இன்றிரவு ஒரு மகத்தான ஆராதனையை நாங்கள் எதிர் பார்க்கிறோம். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. எனக்காக ஜெபியுங்கள், உங்களுக்காக நான் ஜெபிப்பேன். நண்பர்களே, நான் வைராக்கியமுள்ள மனிதாபிமானி என்று கருத வேண்டாம். ஏதோ ஒன்றை உங்கள் மேல் தள்ளப் பார்க்கிறேன் என்று எண்ணாதீர்கள். உங்களை நான் நேசிக்கிறேன். எனக்கு ஒரு கொள்கை உண்டு. அது தான் வேதாகமம். அதிலிருந்து ஒரு வார்த்தையும் எடுத்துப் போட முடியாது. அதனுடன் ஒரு வார்ததையும் கூட்ட முடியாது. அது எழுதப்பட்ட விதமாகவே நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது நாம் தலைவணங்குவோம். நமது விசுவாசமுள்ள நல்ல போதகர் ஜெபம் செய்து சபையோரை அனுப்புவார். சகோ. நெவில், தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக.